பக்கம்:துளசி மாடம்.pdf/132

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

130 துளசி மாடம்


"எந்த நிலையிலும் பிறரால் அவமரியாதைப் படாமல் நம்மைக் காத்துக் கொள்வதும் நாம் பிறரை அவமரியாதைப் ப டு த் தா ம ல் வாழ்வதும்தான் சுயமரியாதை."

“உங்கள் விளக்கம் அழகாக இருக்கிறது"-என்று அவரைப் பாராட்டினாள் கமலி.

"ஆமாம் ! அப்பா எதுக்காக மடத்துக் கிளார்க்கைக் கூட்டிண்டு வரப்போறார் ?" என்று அதுவரை அவர் களுடைய அந்த உரையாடலில் கலந்து கொள்ளாமல் கவனித்துக் கொண்டிருந்த ரவி இறைமுடிமணியிடம் கேட்டான்.

வடக்குத் தெருவில் உள்ள மடத்துக்குச் சொந்த மான காலி மனையில் தான் ஒரு பலசரக்குக் கடை வைத்துக் கொள்வதற்காக ஒப்பந்தப் பத்திரம் எழுதிக் கொள்ள வந்திருக்கும் விவரத்தை இறைமுடிமணி ரவி யிடம் தெரிவித்தார். -

அப்போது கமலி திண்ணையில் உட்கார்ந்திருப் பதைப் பார்க்க ஆவலோடு எதிர்வரிசை வீடுகளி லிருந்தும், பக்கத்து வீடுகளிலிருந்தும் முகங்கள் நீண்டு மறைவதை ரவியும், இறைமுடிமணியும் கவனித்தனர்.

"தங்கள் வீடுகளுக்கு யார் வருகிறார்கள். என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பதைக் கவனிப்பதைவிட அடுத்த வீடுகளில் யார் வருகிறார்கள். என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பதைக் கவனிப்பதில் இந்தக் கிராமத்து ஜனங்களுக்குத் தான் எவ்வளவு அக்கறை ?""அது மட்டும் இல்லே சார் இங்கே இப்போ டாக் ஆஃப் த வில்லேஜே-நானும் கமலியும் தான்." -

"ஆமாம் ! பேசுவானுக...நல்லாப் பேசட் டும் அதுனாலே ஒண்னும் அசந்துடாதீங்க தம்பி."

மடத்துக் குமாஸ்தாவுடன் சர்மா வந்து சேர்ந்தார். ரவியும் கமலியும் இறைமுடிமணியிடம் கூறி விடை பெற்றுக் கொண்டு மாடிக்குச் சென்றார்கள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:துளசி_மாடம்.pdf/132&oldid=579848" இலிருந்து மீள்விக்கப்பட்டது