பக்கம்:துளசி மாடம்.pdf/134

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

132 துளசி மாடம்


"பணம் ஒண்ணும் பெரிசில்லே. நீங்க பண்ற முடிவுக்கு அப்படியே கட்டுப்படறேன் நான்."

"அதான் சொல்லி அனுப்பறேன்னேனே ?" "அப்போ சரி ! வரட்டுங்களா, மறந்துடாமே ஞாபகமாச் சொல்லி அனுப்புங்க...இன்னைக்கே முடிவு பண்ணிக்கலாம்..."

"சொல்லி அனுப்பறேன்..." அஹமத் அலி சர்மாவிடம் சொல்லி வணங்கி விடை பெற்றதோடு அமையாமல் இறைமுடிமணியிடமும் மடத்துக் குமாஸ்தாவிடமும்கூடச் சொல்லிக் கொண்டு புறப்பட்டார்.

"சாய்பு என்ன காரியமா வந்திட்டுப் போறாரு ?"என்று இறைமுடிமணி உடனே கேட்டு விடுவாரோ என்ப தாக எதிர்பார்த்த சர்மாவுக்கு அவர் அப்படிக் கேட் காதது வியப்பை அளித்தது. -

ஒப்பந்தப் பத்திரம் முடிந்து இறைமுடிமணியிடம் அட்வான்ஸை வாங்கி, "இந்தா மடத்துக் கணக்கில் பாங்கிலே கட்டிடு"-என்று குமா ஸ்தாவிடம் அதைக் கொடுத்து அவனை அனுப்பியபின், "இந்தா தேசிகா மணி ! இதைக் கொஞ்சம் படிச்சுட்டுக் குடு"-என்று. மடியிலிருந்த கடிதத்தை எடுத்து நீட்டினார் சர்மா.

இறைமுடிமணி அவர் கொடுத்த கடிதத்தைப் படிக்கலானார். கடிதம் சர்மாவுக்கு உள்ளுர் மிராசு தார் சீமாவையரால் எழுதப்பட்டிருந்தது. வடக்குத் தெரு விலுள்ள மடத்துக்குச் சொந்தமான காலி மனையை அஹமத் அலி சாய்புவின் புதிய ஜவுளிக்கடை பிராஞ்ச் ஒன்றைத் திறக்க லீஸில் ஒர் இருபது வருஷத்துக்கு விடச் சொல்லி சிபாரிசு செய்திருந்தார் சீமாவையர். சாய்பு எவ்வளவு வேண்டுமானாலும் வாடகையாகத் தரத் தயாராயிருக்கிறார் என்றும், முன் பணமாகவும் ஒரு பெருந்தொகை மடத்துக்குத் தருவதோடு கட்டிடத்தைத் தம் செலவில் கட்டிக்கொள்ள அவரால் முடியும் என்றும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:துளசி_மாடம்.pdf/134&oldid=579850" இலிருந்து மீள்விக்கப்பட்டது