பக்கம்:துளசி மாடம்.pdf/138

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

136 துளசி மாடம்


மிகவும் நெருங்கிய சிநேகிதரான இறைமுடிமணியே திடீரென்று நேருக்கு நேர் தன்னைப் புகழத் தொடங்கவே சர்மா திக்குமுக்காடிப் போ னார். கூச்சத்தோடு சொன்னார் :

'நமக்குள்ளே மூணாம் மனுஷா மாதிரி இப்படிப் புகழ்ந்துக்கறது. நன்னா இல்லே."

"நிஜத்தைத்தானே சொல்றேன் ?" "ஒரு நிஜம், மனுஷனைத் தலை கனத்து வீங்கிப் போகச் செய்யும்படியானதா இருக்குமானா அதைச் சொல்லாம உள்ளேயே அந்தரங்கமா மனசுலே வச்சுண் டுடறது இன்னும் சிரேஷ்டம்."

"நல்லதை-நல்லது செய்யிற யோக்கியனை உடனே புகழ்ந்துடனும்பாரு ஐயா. அப்பிடிப்பட்டவங்களைக் கொஞ்சம் முரட்டு வார்த்தைகளாப் பொறுக்கி எடுத்துப் போட்டுச் சொல்லிக்கூடப் புகழலாம்பாரு..."

“அதனாலேதான் புகழறத்துக்காக நல்லது செய்யற வாள்னும் புகழை எதிர்பார்த்து நல்லது செய்யறவாள் னும் புகழுக்கு ஏற்பாடு செய்துகொண்டு நல்லது செய்யற வாள்னும் பல புதுப்புதுப் பிரிவுகள் இப்பல்லாம் ஜனங்கள் மத்தியிலே உண்டாயிண்டிருக்கு. ஒரு புஷ்பம் அபார வாசனையோட இருக்கலாம். ஆனா அந்த வாசனை அதை மோந்து பாக்கறவா எல்லாருக்கும் மட்டும் புரிஞ்சாலே போறும். தான் இத்தனை வாசனைன்னு அந்தப் புஷ்பத்துக்கே புரியணும்னு அவசியமில்லே தேசிகாமணி சாஸ்திரங்கள்ளே மதுபானப் பிரியனா வெறியோடவும் தாகத்தோடவும் அதைத் தவிச்சுத் தேடி அலையறவனோட ஒப்பிட்டுத் தான் புகழையும் ஸ்தோத் திரத்தையும் வலுவிலே தேடி அலையற்தைச் சொல்லி யிருக்கா. புகழும் ஒருவிதமான மதுபானம்தான் தேசிகா மணி !" -

தாம் சொல்லி விடை பெற்றுக்கொண்டு புறப்படக் கருதிய இறைமணிமுடி பேச்சை உடனே வேறு விஷயத் துக்கு மாற்றினார் : •.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:துளசி_மாடம்.pdf/138&oldid=579854" இலிருந்து மீள்விக்கப்பட்டது