பக்கம்:துளசி மாடம்.pdf/140

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

138 துளசி மாடம்


நம்ம புனித அந்தோணியார் ஸ்கூல் டீச்சர் மலர்க்கொடி விஷ்யமாச் சீமாவையாரைக் கொஞ்சம் கண்டிச்சு வை. மறந்துடாதே" என்று கூறி விடை பெற்றுக் கொண்டு. போனார் இறைமுடிமணி.

இறைமுடிமணியின் தலை தெருத் திருப்பத்தில் மேற்குப் பக்கம் மறைந்ததுமே அஹமத் அலிபாய்மோவையரோடு தம்மை நோக்கி வந்து கொண்டிருப் பதைக் கண்டார் சர்மா.

வீட்டுக்கு உள்ளே போக எழுந்திருந்தவர் அவர்கள் லருவதைப் பார்த்ததும் மீண்டும் திண்ணையிலேயே உட்கார்ந்தார்.

படியேறி வந்து அவர்கள் பேச்சைத் தொடங்கு வதற்கு முன் சர்மாவே தொடங்கி விட்டார்.

"என்ன பாய் ! நான்தான் சொல்லி அனுப்பியிருந் தேனே ? இதுக்குள்ளே அவாளைப் போய் ஏன் சிரமப் படுத்தினேள் ?"

'இல்லிங்க... நம்ம ஐயாவே வந்துடறேன்னு புறப் பட்டுக் கூட வந்துட்டாங்க ?"

"உட்காருங்கோ சீமாவையர்வாள் ! இதுக்காக நீங்க ஒரமப்பட்டு இத்தனை தூரம் வந்தே இருக்க வாண்டாம்..."

மோவையர் வெற்றிலைப் பெட்டியையும் பிரம்பை யும் முதலில் திண்ணையில் வைத்துவிட்டு அப்புறம் உட்கார்ந்தார். -

வரவேண்டானுதான் பார்த்தேன். மனசு கேக் கலை. மடத்துச் சொத்து நல்ல மனுஷாளுக்குப் பிரயோஜனப்படனும், மடத்துக்கும் பிரயோஜனப் படனும்...” .

"வாஸ்தவம். அதில் சந்தேகமென்ன ? ரெண்டா வது அபிப்பிராயத்துக்கே இடமில்லாத விஷயம் அது."

"பேசறதென்னவோ தேனெழுகப் பேசிடறேள், ஆனால் காரியத்திலே ஒண்னும் பண்ண மாட்டேங்க றேளே "...

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:துளசி_மாடம்.pdf/140&oldid=579856" இலிருந்து மீள்விக்கப்பட்டது