பக்கம்:துளசி மாடம்.pdf/141

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி 139


அவர் சொற்படி கேளாமல் முந்தியநாள் பூர் மடத்து நிலங்களைக் குத்தகைக்கு விடுவதைத் தான் ஒத்திப் போட்டுத் தள்ளி வைத்த கோபமும் சீமாவையருக்குள் சேர்ந்து இருக்கிறது என்று இப்போது சர்மாவுக்குப் புரிந்தது.

தெருத் திண்ணையில் வீட்டு வாசலில் மூன்றாம் மனிதரான அஹமத் அலிபாயையும் வைத்துக் கொண்டு சீமாவையரோடு குறைந்த பட்சம் ஒரு வாக்கு வாதத்துக்கோ, அதிக பட்சம் சண்டைக்கோ சர்மா தயாராயில்லை. அவருடைய படிப்பும் பண்பாடும் அநாவசியமாக இரைந்து கூப்பாடு போட முடியாதபடி அவர் மனத்தில் பக்குவத்தையும் அடக்கத்தையும் மெருகேற்றியிருந்தன. காது சற்று மந்தமான தன் மனைவி காமாட்சியம்மாளுக்குக் கேட்க வேண்டும் என்பதற்காக இரைந்து பேசும் சமயங்களில் கூட அதற் காகக் கூச்சப்பட்டுக் கொண்டேதான் அப்படிச் செய்வார் அவர். சீமாவையரைப் போல் அட்டகாச மாகப் பேச அவருக்கு ஒரு போதும் வந்ததில்லை. கூடியவரை சுமுகமாகப் பேசிச் சீமாவையரை இப்போது அனுப்பி வைக்க விரும்பினார் சர்மா.

சாயங்காலமாயிருந்தது, விளக்கு வைக்கிற நேரத் துக்கு வீட்டுத் திண்ணையில் சண்டை சத்தம் வேண்டாம் என்று எண்ணியவராய், "இப்போ நான் என்ன பண்ணனும்கறேள் ? எனக்கு நாழியாச்சு, சந்தியா வந்தனதுக்கு ஆத்தங்கரைக்குப் புறப்படனும். உங்க ளுக்கும் ஏகப்பட்ட ஜோலி இருக்கும் பெரிய மனுஷாளை நான் ரொம்பக் காக்க வைக்கப்படாது. வந்த கரரியத்தைச் சொல்லுங்கோ"- என்றார் சர்மா.

'மறுபடியும் நான் சொல்லனுமா ஒய் ? அதான் அப்பவே லெட்டர் எழுதிக் குடுத்தனுப்பிச்சேனே... நம்ம பாய்க்கு அந்த வடக்குத் தெரு எடத்தை விடணும்."...

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:துளசி_மாடம்.pdf/141&oldid=579857" இலிருந்து மீள்விக்கப்பட்டது