பக்கம்:துளசி மாடம்.pdf/144

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

142 துளசி மாடம்


சாளோ? சனியன்...இங்கேயிருந்து எத்தனை தடவைதான் கத்தறது ? செய்யறேன். செய்யலேன்னு ஒரு வார்த்தை வந்து பதில் சொல்லப்பிடாதோ ? பெண்கள் ரெண்டெ ழுத்துப் படிச்சுட்டாலே பிடிபடாமத் தலை கனத்துப் போயிடறதுகள் இந்த நாளிலே 7...”

“இங்கே பாரு எங்கே இருக்கா ? அவ இன்னும் வரவே இல்லியே ?"- என்று வாய் நுனிவரை வந்து விட்டது சர்மாவுக்கு. ஆனால் அதைச் சொல்லாமல் "விளக்கேற்றி வச் சாச்சு. வாசல் திண்ணைப் பெறை யிலே விளக்கைப் பார்த்தேன். நீ பாட்டுக்குக் கவலைப் டடாமே உன் கைக்காரியத்தைப் பார்'- என்று வேறு வார்த்தைகளைச் சொல்லிச் சமாளித்தார் சர்மா. கமலிதான் அதைச் செய்தாள் என்று காமாட்சியம்மா வரிடம் சொல்லி அப்போது கமலியை வம்பிலே மாட்டி வைக்க விருப்பமில்லை அவருக்கு.

நல்லவேளையாக அப்போது கமலியும் அங்கே இல்லை. மாடிக்குப் போயிருந்தாள். ரவியையும் தன்னோடு ஆற்றங்கரைக்கு அழைத்துப் போகக் கருதி மாடிக்கப் போகும் படிக்கட்டில் நாலைந்து படிகள் ஏறி அவன் பேரைச் சொல்லிக் சுப்பிட்டார் அவர்.

"அவர் இல்லை. நாலைந்து வீடுகள் தள்ளி இதே தெருவிலே யாரோ பழைய சிநேகிதரைப் பார்த்துப் பேசி விட்டு வருகிறேன் என்று போயிருக்கிறார் - என்று கமலி மாடியிலிருந்து எட்டிப் பார்த்துச் சர்மாவுக்குப் பதில் சொன்னாள். பதில் சொல்லியதோடு நிற்காமல் “ஏன்? ஏதாவது செய்யனுமா ? நான் செம்யறேன் சொல்லுங் களேன்"- என்றும் தானே முன்வந்தாள்.

"ஒண்னுமில்லேம்மா! நீ ஏதோ படிச்சிண்டிருக்கே போலிருக்கே... படி.."- என்று அவளுக்குப் பதில் கூறிவிட்டுப் புறப்பட்டார் சர்மா. முதலில் அவளை 'நீங்கள்’ என்றுதான் விளிக்க நினைத்தார் அவர். அப்புறம் அது மிகவும் செயற்கையான காரியம் என்று அவருக்கே தோன்றியது. கிராமத்தில் இளம் பெண்களையும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:துளசி_மாடம்.pdf/144&oldid=579860" இலிருந்து மீள்விக்கப்பட்டது