பக்கம்:துளசி மாடம்.pdf/146

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

144 துளசி மாடம்


கொண்டார். சீமாவையரின் கடிதத்தை மடத்துக்கு அனுப்பி வைத்து விவரம் எழுதினால், “ஏற்கனவே ஒருவருக்கு வாக்களித்தபடி வடக்குத் தெரு மனையை வாடகைக்கு விட்டாயிற்று. எனவே பூரீமடத்தின் முந்திய முத்திராதிகாரியும் சிஷ்யரும் ஆகிய தங்கள் சிபாரிசை எற்க இயலாததற்கு மன்னிக்கவும்" என்று மடத்தி, விருந்தே சீமாவையருக்குப் பதில் வந்துவிடும். அந்தப் பதிலை அப்படியே சீமாவையரிடம் காண்பித்துவிட லாம். இதனால் தமக்கும் அவருக்கும் நேரடியாக விரோதம் எதுவும் வராது என்று எண்ணிக் கொண் டிருந்தார் சர்மா. -

இணையற்ற சாஸ்திர ஞானமும் பாண்டித்தியமும் அவருக்கு அளித்திருந்த சஹ்ருதயப் பாங்கு யாரோடும் பூசலும், போட்டியும், சண்டையும், சச்சரவும் இடமுடி யாதபடி அவரைச் செய்திருந்தன. பிறரையும் பிறவற்றை யும் துன்புறுத்தவோ கொல்லவோ கூடாது என்ற சாதாரண சன்மார்க்கத்திற்கும் ஒரு படி மேலே போய்ப் பிறர் மனம் புண்படும்படிப் பேசவும் சச்சரவிடவும் கூடச் செய்யாத உன்னதமான சன்மார்க்கத்தை வாழ்வில் அவர் கடைப்பிடித்து வந்த காரணத்தால் சீமாவைய ரோடும் கூடத் தகராறு வைத்துக் கொள்ள அவர் விரும்பவில்லை. -

சந்தியாவந்தனத்துக்காக ஆற்றில் படித்துறையில் அவர் இறங்கினபோது யாரோ உள்ளூர் வைதிகர்கள் இரண்டு மூன்றுபேர் ஏற்கெனவே ஜபம் பண்ணிக் கொண்டிருந்தார்கள். ஜபம் முடித்தவர்கள் அருகே வந்து "பிள்ளை வந்திருக்கானாம...?"- என்று அவரிடம் விசாரித்தார்கள். முதல் கேள்விக்கு அவரது பதில் கிடைத்ததுமே சிறிது தயக்கத்துடன், “அவன் கூட இன்னம் வேற யாரோ வந்திருக்காப்ல இருக்கே?"என்று சந்தேகத்தோடு கூடிய அடுத்த கேள்வி பிறந்தது. "ஆமாம்"-என்பதற்கு அதிகமாக ஒரு வார்த்தை கூடவோ குறையவோ செய்யாமல், தயக்கத்தோடு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:துளசி_மாடம்.pdf/146&oldid=579862" இலிருந்து மீள்விக்கப்பட்டது