பக்கம்:துளசி மாடம்.pdf/147

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி 145


கூடிய இந்த இரண்டாவது கேள்விக்குக் கத்தரித்தது போல் பதில் சொல்லியிருந்தார் சர்மா. அவர் பதில் சொல்லிய விதமே அதைப்பற்றி அவர்கள் மேலே எதுவும் கேட்கவிடாதபடி செய்தது.

சர்மா ஆற்றிலிருந்து வீடு திரும்பக் கிளம்பியபோது நன்றாக இருட்டிவிட்டது. சிவன்கோவில் மணியோசை அந்த அழகிய சிற்றுாரின் சாயங்கால மெளனத்தைப் புனிதவனப்போடு கலைத்துவிட்டுக் கொண்டிருந்தது. கோவிலுக்குப் போய்த் தரிசனம் செய்துவிட்டு அப்புறம் தான் வீடு சென்றார் அவர். கோவிலிலும் நடுவழியிலும் பல சந்திப்புக்கள். பல வழக்கமான கேள்விகள். சலிப்பில்லாத வழக்கமான அளவான ஒரே மாதிரியான பதில்கள். .

தெருவிலிருந்து வீட்டுப் படியேறி உள்ளே சென்ற போது இடைகழியிலேயே காமாட்சியம்மாள் எதற்கோ கூடத்தில் இரைந்து கொண்டிருப்பது அவருக்குக் கேட்டது. பாருவும், கமலியும், கூடத்தில் காமாட்சி யம்மாளுக்கு முன்னால் நின்று கொண்டிருந்தார்கள். ரவி இன்னும் வீடு திரும்பவில்லை போலிருக்கிறது. சர்மா உள்ளே வருவதைக் கண்டு இரைச்சல் நின்றுபோய் ஒரு தற்காலிக அமைதி கவிழ்ந்தது.

ஏதோ ஒரு சிறிய மனஸ்தாபத்துக்குரிய மெளன மூட்டம் அந்தக் கூடத்தில் அப்போது நிலவிக் கொண்டி ருந்தது. சர்மாவைப் பார்த்ததும், "நீங்களே சொல்லுங்கோ, இது நன்னாவா இருக்கு ?"-என்று காமாட்சியம்மாள் கேட்கத் தொடங்கி அதை விவரித்த போதுதான் தாம் நாசூக்காகச் சமாளித்து விட்டதாக நினைத்துக்கொண்டு புறப்பட்டுப் போயிருந்த ஒரு விஷயம் இப்போது தற்செயலாகக் கண்டு பிடிக்கப் பட்டுச் சிறியதொரு சண்டையாய்த் தலையெடுக்க, இருப்பது அவருக்கே புரிந்தது. .

து-10

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:துளசி_மாடம்.pdf/147&oldid=579863" இலிருந்து மீள்விக்கப்பட்டது