பக்கம்:துளசி மாடம்.pdf/148

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

13

காமாட்சியம்மாள் நேரடியாகக் கமலியைக் கடிந்து கொள்ளவில்லை என்றாலும் பார்வதியை அவள் கண்டித்துக் கொண்டிருந்த வார்த்தைகளின் வேகம் கமலி யையும் பாதித்தது. சமையலறைக்குள் தோசைக்கு அரைத்துக் கொண்டிருந்த காமாட்சியம்மாள் பார்வதி யைப் பார்த்ததும் முதல் கேள்வியாக “ஏண்டி ! உன்னைச் சந்தி விளக்கை ஏத்தி வாசப்பெறையிலே வைக்கச் சொன்னா ஏத்தியாச்சுன்னு வந்து சொல்றதில்லையா ? நீ பாட்டுக்கு ஏத்தி வச்சுட்டு ஊர்சுத்தப் போயிறதோ " என்று கண்டித்து இரைந்திருக்கிறாள்.

"நீ எப்ப சொன்னேன்னே எனக்குத் தெரியாதும்மா ? நான் வீட்டுக்கே இப்பத்தான் வாேன். நீ சொன்னதை நான் கேக்கவும் இல்லே. சந்தி விளக்கு ஏத்தவும் இல்லே" என்று பார்வதி இரைந்து பதில் சொல்லியது காதில் விழுந்து மாடியில் ஏதோ புத்தகம் படித்துக் கொண்டி ருந்த கமலி கீழே இறங்கி வந்தாள்.

"நீங்க சொல்கிறபோது பார்வதி வீட்டிலேயே இல்லை. உங்கள் குரலைக் கேட்டு நான்தான் வந்து விளக்கேற்றி வைத்தேன்" என்று கமலி சொல்லி அதே சொற்களை இன்னும் உரத்த குரலில் அம்மாவுக்குக் காது கேட்கும்படி மறுபடி எடுத்துச் சொன்னாள் பார்வதி.

காமாட்சியம்மாள் இதைக் கேட்டு நேருக்கு நேர் கமலியைக் கடிந்து கொள்ளவில்லை. பார்வதியைத்தான் மேலும் கடிந்து கொண்டாள். ஆனால் அவள் பார்வதியைக் கண்டித்த சொற்களிலேயே கமலிக்கு மன வேதனை உண்டாக்கும் அர்த்தம் தொனித்தது.

"ஆத்து மனுஷா விளக்கேத்தனும்டீ, ! அப்பதான் லட்சுமி வீட்டிலே தங்குவா. வந்தவா போனவாள்ளாம் விளக்கேத்தறாப்பில விட்டுட்டு நீ பாட்டுக்கு ஊர் சுத்தப் போயிடறதாடீ ?"

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:துளசி_மாடம்.pdf/148&oldid=579864" இலிருந்து மீள்விக்கப்பட்டது