பக்கம்:துளசி மாடம்.pdf/149

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

Af

நா. பார்த்தசாரதி e 147

-அம்மா இ ப் படி எடுத்தெறிந்தாற்போலப் பேசியது பார்வதிக்கே பிடிக்கவில்லை. மென்மையான இதயம் படைத்த கமலிக்கும் அது சற்றே உறைத்தது. இந்த சமயத்தில்தான் ஆற்றங்கரைக்குச் சந்தியா வந்தனம் செய்யப் போயிருந்த சர்மா திரும்பியிருந்தார். அப்போது அங்கே என்ன நடந்து கொண்டிருந்தது என்பதைப் புரிந்து கொள்ள அவருக்கு அதிக நேரம் பிடிக்கவில்லை. எந்தத் தகராறு உருவாகாமல் தவிர்ப் பதற்காக ஆற்றங்கரைக்குப் புறப்படுவதற்குமுன் கமலி தான் விளக்கேற் வைத்தாள் என்பதை அவர் காமாட்சியம்மாளிடம் கூறாமல் போயிருந்தாரோ அந்தத் தகராறே மெல்ல உருவாகியிருந்தது இப்போது.

தன் மகனின் நட்பை நம்பி அவனிடம் தன்னைப் பூரணமாக ஒப்படைத்துக் கொண்டு பல்லாயிரம் மைல் களுக்கு அப்பாலிருந்து அவனோடு புறப்பட்டு வந்திருக் கும் ஒருத்தியைக் காமாட்சி இப்படிப் புண்படுத்தி விட்டாளே என்று சர்மாவுக்கு வருத்தமாக இருந்தது.

"நடக்கக் கூடாதது ஒண்னும் நடந்துடலை. எதுக் காக இப்பிடிக் கூப்பாடு போட்டு இரையரே பேசாமே உள்ளே போய் உன் காரியத்தைப் பாரு'-ன்ைறு காமாட்சியம்மாளைக் கண்டித்துவிட்டுப் பார்வதியின் பக்கம் திரும்பி, "ஏய் பாரு! நீ அவளை மாடிக்குக் கூட்டிண்டு போ..."-என்று கமலியைச் சுட்டிக் காட்டினார். பார்வதியும் கமலியும் மாடிக்குப் போனார்கள். அவர்கள் சென்றபின் மேலும் காமாட்சி யம்மாளைக் கண்டித்தார் அவர் :

"உனக்கு உன் பெண்ணைக் கண்டிக்கிறதுக்குப் பாத்தி யதை உண்டு. அடுத்தவா மனசு புண்படாப்ல பேசறதுக்கு நீ யாரு? நீ பேசினது கொஞ்சங் கூட நன்னா இல்லே. வீடு தேடி வந்திருக்கிறவாளைப் பேசற பேச்சா இது?" -

"5 T பேசலே. ஊரே பேசிண்டிருக்குங்கறது

உங்களுக்குத் தெரியாது போலிருக்கு."

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:துளசி_மாடம்.pdf/149&oldid=579865" இலிருந்து மீள்விக்கப்பட்டது