பக்கம்:துளசி மாடம்.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி 13


கல்லூரியில் வேலை பார்த்தபோது மாலை நேரங்களில் கம்மா இருக்க வேண்டாமே என்று அல்லயான்ஸ் பிரான்லேயில் சேர்ந்து வாங்கிய பிரெஞ்சு டிப்ளோமா வும் பயன்பட்டது இப்போது.

அந்த உத்தியோகத்திற்காக டில்லியில் நடந்த இண்டர் வ்யூவுக்கு மொத்தம் ஆறுபேர் வந்திருந்தார்கள். அதில் இருவர் அதிகம் வயது மூத்தவர்கள் என்பதால் தகுதி இழந்தனர். வேறு இருவருக்குப் பிரெஞ்சு மொழி ஞானம் சரியாயில்லை. இன்னொருவருக்குச் சம்ஸ்கிருதம் போதுமான அளவு தெரியவில்லை. இண்டர் வ்யூ நடத்தியவர்களுக்கு எல்லா வகையிலும்-கம்பீரமான அழகிய உயர்ந்த தோற்றம் உட்படத்-திருப்தியளித்தது ரவிதான். அதனால் ரவிக்கு அந்தப் பதவி கிடைத்தது.

முதலில் அவன் பெற்றோர் தயங்கினாலும், அந்தப் பதவிக்காக இந்தியாவில் கனவிலும் எதிர்பார்க்க முடி யாத சம்பளத் தொகையைக் கேள்விப்பட்டதும் சம்மதித் தார்கள். இதுதான் வெளிநாட்டில் ரவிக்கு ஒர் உத்தி யோகம் கிடைத்த வரலாறு.

இன்று புதிதாக எழுந்துள்ள பிரச்னையையும் இந்தப் பழைய வரலாற்றையும் சேர்த்தே இப்போது மறுபடி நினைத்தார் சர்மா, ஒரு முடிவுக்கு வருவதற்குமுன் வேனு மாமாவையும் அவர் பெண் வசந்தியையும் கலந்தாலோசிக்கலாம் என்று சர்மாவுக்குத் தோன்றியது. ரவியின் கடிதத்தை எடுத்துக்கொண்டு வடக்குத் தெருவில் இருந்த வேணுமாமாவின் வீட்டுக்குச் சென்றார் affruorr. - -

அவர் போன சமயம் வேணுமாமா வீட்டில் இல்லை. வேணுமாமாவின் மகள் வசந்தி கூடத்தில் நாற்காலியில் சாய்ந்தபடி ஈவ்ஸ் வீக்லி படித்துக் கொண்டிருந்தாள்.

சர்மாவைப் பார்த்ததும், “வாங்கோ மாமா ! அப்பா வெளியிலே போயிருக்கார்... திரும்பற சமயம் தான்.உட்காருங்கோ"-என்று வரவேற்றாள் வசந்தி.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:துளசி_மாடம்.pdf/15&oldid=579729" இலிருந்து மீள்விக்கப்பட்டது