பக்கம்:துளசி மாடம்.pdf/151

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி 149


படித்துறையில் ஜபம் பண்ணிக் கொண்டிருந்த வைதிகர் களின் விசாரணை எல்லாமாகச் சேர்ந்து இந்தப் பிரச்னை நாளைக்கோ, நாளன்றைக்கோ ஊரளாவிய தாகவுப் ஆகக்கூடும் என்பதற்கு அறிகுறிகளாகத் தோன்றின.

தம்முடைய மனைவி காமாட்சியம்மாள் அப்படிப் பேசியதற்குக் கமலியிடம் அவள் சார்பில் தானாவது மன்னிப்புக் கேட்க வேண்டுமென்று தோன்றியது அவருக்கு. அதற்காக மாடிப்படி ஏறியவரின் செவிகளில் மங்கலமான துர்க்கா சப்த ஸ்துதியின் அழகிய ஸ்தோத்திரம் விழுந்தது.

ஸர்வ மங்கல மாங்கல்யே லிவே சர்வார்த்த

. - லாதிகே ஸ்ரண்யே த்ரியம்பகே தேவி நாராயணி

. நமோஸ்துதே." பார்வதி முதலில் சொல்ல அதைத் திருப்பிச் கொல்லிக் கொண்டிருந்தாள் கமலி. கொஞ்சங்கூடக் குழப்பமில்லாத தெளிவான உச்சரிப்பில் கமலி அதைத் திருப்பிர் சொல்லியதைக் கேட்டுச் சர்மாவுக்கு மெய் சிலிர்த்தது. இப்படிப் பாந்தமாய் அழகாக ஸ்தோத்திரம் சொல்லு கிறவள் விளக்கேற்றியதால் லட்சுமி வீட்டில் தங்க மாட்டாள் என்று சாடியிருந்த காமாட்சியம்மாள் மேல் இப்போது மீண்டும் கோபம் கோபமாக வந்தது. அவருக்கு. மேலே ஏறிச் செல்லாமல் நின்று கொன் டிருந்த படியிலிருந்தே அதை மேலும் தொடர்ந்து கேட்டுக் கொண்டிருந்தார் சர்மா. தேசம், ஆசாரம், கலாசாரம், இனம், நிறம் இவற்றையெல்லாம் மானிட ஜாதியின் ஒற்றுமைக்குப் பயன்படுத்தாமல் இடையூறு களாகவும் தடைகளாகவும் பண்ணிவிட்டவர்கள் மேல் அந்த விநாடியில் கோபம் கோபமாக வந்தது அவருக்கு. மேலே படியேறிப் போய்க் கமலியிடம் பேசலாமா, அவர்கள் தனிமையைக் கலைக்காமல் அப்படியே திரும்பிக் கீழே போய் விடலாமா என்று படியிலேயே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:துளசி_மாடம்.pdf/151&oldid=579867" இலிருந்து மீள்விக்கப்பட்டது