பக்கம்:துளசி மாடம்.pdf/153

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி 151


கமலியின் பூப்போன்ற மனம் அடுத்தடுத்து வேதனைப் படும்படியான சம்பவங்கள் அந்த வீட்டில் நடந்து விடுமோ என்பதுதான்.

காமாட்சியம்மாள் என்ன பேசுவாள், எ ப் ப டி நடந்து கொள்வாள் என்பதை ஒவ்வொரு கணமும் கண் காணித்துக் கமலிக்கு ஏற்பட இருக்கும் மனத்துன்பங் களைத் தவிர்ப்பது என்பது இயலாத காரியம். இதற்காக என்றே தானோ ரவியோ இ ரு ப த் து நாலுமணி நேரமும் வீட்டில் அடைந்து கிடந்து காமாட்சியம் மாளைக் கவனித்துக் கொண்டிருப்பது என்பதும் நடை முறையில் சாத்தியமாகாத காரியம். கமலியின் மேலுள்ள அனுதாபத்தினாலேயே அவர் இப்போது இப் ப டி நினைத்தார். பச்சைக் கிளியைக் கூண்டிலடைத்த மாதிரி அவளை அந்த வீட்டின் கடுமையான ஆசார அனுஷ்டானங்களில் சிக்கவைப்பதற்கு அவரே தயங்கி னார். கமலியும் ரவியும் சங்கரமங்கலத்தில் வ ந் து இறங்குவதற்கு முன் அவர் மனத்தில் பல தயக்கங்கள் அலை மோதியிருந்தன. அவை வெறும் தயக்கங்களாகத் தான் இருந்தனவே ஒழிய வெறுப்புக்களாக இல்லை. கமலி வந்து பழகியபின் அவரைப் பொறுத்தவரை அந்தத் தயக்கங்கள் கூட மெல்ல மெல்ல மாறி உள்ளூறப் பிரியமாக முகிழ்ந்திருந்தது. காரணமும் அர்த்தமும் இல்லாத ஒரு குருட்டுக் காதலாக அது அவருக்குப் பட வில்லை. இவன் அவள் மனத்தைக் கவர்ந்ததற்கும் அவள் இவன் மனதைக் கவர்ந்ததற்கும் நியாயமான இயல்பான காரணங்கள் இருப்பதை இப்போது அவர் உணர்ந்தார். அந்நிய தேசத்துக்குப் போய்த் திரும்பும் சராசரி இந்திய இளைஞன் திமிருக்காகவும் ஊரார் வியப்பதற்காகவும் ஒரு வெள்ளைத் தோலுக்குரியவளை உடன் இழுத்துக் கொண்டு வருவதைப் போல் இது இல்லை.

ரவியே கடிதத்தில் எழுதியிருந்ததைப் போல் இது உண்மையிலேயே காந்தருவ சம்பந்தமாகத்தான் இருந்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:துளசி_மாடம்.pdf/153&oldid=579869" இலிருந்து மீள்விக்கப்பட்டது