பக்கம்:துளசி மாடம்.pdf/155

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி 153


இருவருமாகக் கிணற்றடிக்குப் புறப்பட்டுப் போனார் கள். கிணற்றடி மேடையில் சிமெண்ட் தளம் போட் டிருந்தது. தோய்க்கிற கல்லை ஒரு ஸ்டுல் உயரத்துக்குத் தூக்கிக் கட்டியிருந்ததால் உட்கார வசதியாயிருந்தது. சர்மா அதில் உட்கார்ந்து கொண்டார்.

அதற்கு இணையான உயரத்தில் அருகே இருந்த சிமெண்ட்டுத் தொட்டியின் சுவரில் ரவி உட்கார்ந்து கொண்டான்.

தாம் பேசத் தொடங்குவதற்கு முன் அதற்குப் பயன் படும் சில பூர்வாங்கமான தகவல்களை ரவியிடம் முதலில் விவரிக்கத் தொடங்கினார் சர்மா. கமலியைப் பற்றிய காமாட்சியம்மாளின் சந்தேகங்கள், அவள் அடிக்கடி தம்மிடம் துாண்டித் துளைத்துக் கேட்கும் கேள்விகள், அன்று மாலை கமலி சந்தி விளக்கு ஏற்றி வைத்தது தொடர்பாக ஏற்பட்ட தகராறு, சீமாவையரின் விசாரிப்பு, படித்துறையில் ஊர் வைதிகர்களின் கேள்விகள் எல்லாவற்றைiம் ஒவ்வொன்றாய் விளக்கமாகச் சொல்லி விட்டு, அதற்கு அவன் என்ன பதில் சொல்கிறான் என்று எதிர்பார்த்து அந்தப் பதிலுக்காகத் தம் பேச்சை நடுவே நிறுத்தினாற் போலச் சிறிது நேரம் நிறுத்தியிருந்தார் சர்மா. -

'நீங்க சொல்றதெல்லாம் சரி அப்பா ! இதிலே இலது நான் ஏற்கெனவே எதிர்பார்த்ததுதான். இப்போ நான் என்ன பண்ணணும்கறேள்...?’’

“என்னைத் தப்பாப் புரிஞ்சுக்காதே ! உன்னோட லெட்டர் கிடைச்சப்பவும் அதுக்கப்புறமும் இருந்த கோபமும் குழப்பமும் கூட இப்போ எனக்கு இல்லே, அந்தப் பெண் கமலியை எனக்கு ரொம்பப் பிடிச்சிருக்கு. உங்க சிநேகிதத்திலேயும் தப்பு இருக்கிறதாப் படலே. ஆனா உங்கம்மா, ஊர் உலகம் எல்லாரும் இதுக்குக் குறுக்கே இருக்காங்கிறதை நீ மறந்துடப் பட்ாது."

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:துளசி_மாடம்.pdf/155&oldid=579871" இலிருந்து மீள்விக்கப்பட்டது