பக்கம்:துளசி மாடம்.pdf/156

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

154 துளசி மாடம்


"நீங்க தப்பாப் புரிஞ்சுக்கல்லேங்கிறதே எங்க பாக்கியம்தான் அப்பா !”

பதப்பாப் புரிஞ்சுக்கல்லைன்னாலும் சூழ்நிலைகளுக் கும் மற்றவர்களின் நிர்ப்பந்தங்களுக்கும் ஊர், உலகத் துக்கும் நான் கட்டுப்பட்டவன்கிறதை நீ மறந்துடாதே..."

"இந்தியாவின் மிகப்பெரிய துரதிருஷ்டமே அதன் பூரண ஞானவான்கள் எல்லாரும் பயந்தாங் கொள்ளி களாக இருப்பதுதான் ..."

"அறிவு என்பது வேறு. சுற்றுப்புறத்தோடு ஒத்துப் போவது என்பது வேறு... நான் இதை எனக்காகச் சொல்லலே ரவி ! இன்னிக்குச் சாயங்கலாம் அவ தானா நல்லது செய்யறதா நெனச்சுண்டு விளக்கேத்தி வைக்கப் போக உங்கம்மா சத்தம் போட்டு இரைஞ்சாளே, அது மாதிரி ஒண்ணொண்ணா நடந்தா வீணா அவ மனசு புண்படுமேன்னுதான் யோசிக்கிறேன்."

"சரிப்பா... நீங்களே இதுக்கு வேற யோசனை சொல்லுங்கோ. என்ன செய்யலாம் ? ஒரு நா ரெண்டு நாளோட போற விஷயம் இல்லே இது, இந்தத் தடவை நான் ஒரு வருஷ லின்லே வந்திருக்கேன். இந்தியாவிலே, ஒரு காலத்திலே பிரெஞ்சுக் காலனிகளா இருந்து இன்னிக்கு இந்திய யூனியனாயிட்ட பிரதேசங்களிலே பிரெஞ்சுக் கலாசாரமும் இந்தியக் கலாசாரமும் எந்த அளவுக்கு இணைஞ்சிருந்தது என்கிறதை ஆராய்ஞ்சு எழுதறத்துக்காக அவ வந்திருக்கா. அதுக்காக அமெரிக்கன் ..பவுண்டேஷன் ஒண்ணு அவளுக்கு உதவி செய்யறது. ஒரு வருஷம் இங்கே இருக்கப் போறா. நானும் ஏறக்குறைய இதே மாதிரி ஒரு அஸைன் மெண்ட்'டிலேதான் வந்திருக்கேன். சங்கரமங்கலத்தை ஹெட் குவார்ட்டர்ஸா வெச்சிண்டுதான் எங்க காரியத் தைச் செய்யறதா வந்திருக்கோம்..." .

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:துளசி_மாடம்.pdf/156&oldid=579872" இலிருந்து மீள்விக்கப்பட்டது