பக்கம்:துளசி மாடம்.pdf/158

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

156 துளசி மாடம்


"நீ இங்கே தங்கிக்கிறதைப் பத்திப் பேச்சே இல்லே ; இது உன் வீடு. உன் அப்பா உன் அம்மா உன் மனுஷா. உனக்கும் அம்மாவுக்கும் பெரிசாச் சண்டை எதுவும் வந்துடப் போறதில்லே. கமலி தங்கிக்கறதைப் பத்தி தான் இப்போ பிரச்னை, உனக்கு ஆட்சேபணை இல்லேன்னாக் கமலியை மட்டும் வேணுமாமா வீட்டு மாடியிலே தங்க வச்சுடலாம். அவாளே கா ஸ்மா பாலிடன். ரொம்ப நாகரிகம்கிறதாலே அவா வீட்டிலே இவளாலே அவாளுக்கு எந்தச் சிரமமும் வராது."

"அப்படிப் போறதா இருந்தாக் கமலியை மட்டும் தனியா அவா வீட்டுக்குப் போகச் சொல்ல முடியா துப்பா, இட் வோண்ட் லுக் நைஸ். நானும் கூடவே போயிடவேண்டியதுதான்."

"அவ போறதைப்பத்தி ஒண்னுமில்லை. ஆனா நீயும் அவளோட சேர்ந்து போயிட்டாத்தான் அதுக்குக் கண்ணு மூக்குக் காது வச்சு ஊர்ல வீண் வம்பு வதந்தியெல்லாம் கிளம்பும்..."

"என் அபிப்பிராயம் கமலியும் இங்கேயே நம்கூட

இருக்கலாம்கிறதுதான். அம்மாவாலே சிரமங்கள்

ஏற்பட்டாலும் கமலியாலே அதைச் சமாளிச்சுக்க

முடியும்..."

"நீ சொல்றே. ஆனாக் கமலியும் என்ன திணைக்கி

றாள்னு எனக்குத் தெரிய வேண்டாமா ?” -

"இதுலே ஒளிவு மறைவு எதுக்கு ? என்னோட வாங்கோ ! இப்ப அவளையே கேட்டுடலாம்..."

"நான் எதுக்குடா ? நீயே கேட்டுச் சொல்லு. போறும்..." -

"இல்லே காரணமாத்தான் சொல்ே றன். நீங்களும் வாங்கோ...அப்பத்தான் சந்தேகத்துக்கு இடமில்லாமே அவளை நீங்க புரிஞ்சிக்க முடியும்."

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:துளசி_மாடம்.pdf/158&oldid=579874" இலிருந்து மீள்விக்கப்பட்டது