பக்கம்:துளசி மாடம்.pdf/160

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

158 துளசி மாடம்


சர்மாவும் ரவியும் நாற்காலிகளில் உட்கார்ந்து கொண்டனர். கமலியையும் உட்காரச் சொல்லி ரவியே வேண்டினான். ஆனால் அவள் உட்காரவில்லை.

"உட்காரேம்மா...உங்கிட்டக் கொஞ்சம் பேச லாம்னு வந்திருக்கோம். எவ்வளவு நாழிதான் நின்னுண்டே யிருப்பே ? உன் மரியாதை எனக்குப் புரியறதும்மா. இப்போ நானே சொல்றேன், நீ கொஞ்சம் உட்கார்ந்துக்கோ..."

"பரவாயில்லை. சொல்லுங்கள், நிற்பது எனக்கு ஒன்றும் சிரமமாகப் படவில்லை..."

'உனக்கு எதுவும் சிரமமா இருக்கோ இல்லையோ, நீ நிக்கறது எங்களுக்குக் கஷ்டமாயிருக்கும்மா..."

'கஷ்டம் ஒன்றுமில்லை, சொல்லுங்கள்..." "மனசுலே ஒண்ணும் ஒளிவு மறைவில்லாமே எதுவும் தப்பா எடுத்துக்காமே நான் கேக்கறதுக்கெல்லாம் நீ பதில் சொன்னியானா எனக்குப் பெரிய உபகாரமா யிருக்கும் அம்மா! நான் ரவியைத்தான் உன்னைக் கேக்கச் சொன்னேன். அவன் நீங்களே கேட்டுக் கோங்கோன்னு என்னைக் கொண்டு வந்து இங்கே நிறுத்திட்டான்."

"ஏம்மா, நீ சாயங்காலம் சந்தி விளக்கு ஏத்தி வச்சதைப் பத்திக் காமாட்சி, பாருகிட்ட என்னென் னமோ இரைஞ்சிண்டிருந்தாளே, அதுலே உனக்கு ஒண்ணும் மனசு வருத்தம் இல்லியே : தயங்காமல் நீ எங்கிட்ட நிஜத்தைச் சொல்லலாம்."

"வருத்தப் படுவதற்கு இதில் என்ன இருக்கிறது ? அவர்கள் பாருவைக் கண்டித்தார்கள். பாருவை அவர்கள் கண்டிக்கக் கூடாதென்று நான் எப்படிச் சொல்ல முடியும் : ஒரு வேளை பாருவைக் கண்டிக்காமல் அவர்கள் என்னையே நேருக்கு நேர் கூப்பிட்டுக் கண்டித்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:துளசி_மாடம்.pdf/160&oldid=579876" இலிருந்து மீள்விக்கப்பட்டது