பக்கம்:துளசி மாடம்.pdf/161

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி 159


திருத்தால்கூட நான் அதற்காக வருத்தப் பட்டிருக்க மாட்டேன். அவர்கள் உரிமையோடு என்னை ஏன் கண்டிக்க மாட்டேனென்கிறார்கள் என்பதுதான் என் வருத்தமே தவிர ஏன் கண்டிக்கிறார்கள் என்பது வருத்த மில்லை. ரவியின் அம்மா உரிமை எடுத்துக் கொண்டு என்னை நேருக்கு நேர் கண்டித்திருந்தால் நான் இன்னும் எவ்வளவோ சந்தோஷப்பட்டிருப்பேன்...'

-இத்தனை அடக்கமும் விநயமும் நிறைந்த ஒரு பதிலை அப்போது அவளிடமிருத்து சர்மா எதிர்பார்க்க வில்லை. அதனால் சிறிது தயக்கத்துக்கும், மெளனத்துக் கும் பின் மேலும் அவர் அவளைக் கேட்டார் :

“ஒரு வருஷத்துக்கும் மேலே இங்கே இருக்க நேரலாம்னு கேள்விப்பட்டேன். ரொம்ப சந்தோஷம் இந்த வீட்டிலேயே உன் செளகரியங்களுக்கு ஒத்து வருமா ? ஒத்து வருமானால் நீயும் ரவியும் தாராளமா இங்கேயே இருந்துக்கலாம். இல்லையானா இதைவிட செளகரியமாவும், தனியாவும் வேற இடம் உங்களுக் காகப் பக்கத்திலேயே ஏற்பாடு பண்ண என்னாலே முடியும்."

"இங்கே எனக்கு எந்த அசெளகரியமும் இருக்கிற தாகப் படவில்லை. ஒரு வீடு என்பது செளகரியங்களும் அசெளகரியங்களும் சேர்ந்ததாகத்தான் இருக்கும். தனியாகச் செளகரியங்களே நிறைந்ததும், தனியாக அசெளகரியங்களே நிறைந்ததுமான ஒரு வீடு உலகம் முழுவதும் தேடினாலும்கூடக் கிடையாது.”

"அப்படியில்லேம்மா ஒத்துப்போகாத மனுஷா ஒருத்தர் இருந்தாலும் தினம் விடிஞ்சு எழுந்திருந்தாச் சண்டையும் பூசலுமான்னா இருக்கும் ? சண்டையும் பூசலுமாகவே இருந்தா எப்டோ மத்த காரியமெல்லாம் பாக்கறது ?"

'நீங்கள் சொல்வதைக் கேட்டு நான் ஆச்சரியப்படு கிறேன், இதுவரை எந்த ஒரு சண்டையும் பூசலும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:துளசி_மாடம்.pdf/161&oldid=579877" இலிருந்து மீள்விக்கப்பட்டது