பக்கம்:துளசி மாடம்.pdf/162

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

160 துளசி மாடம்


இங்கு என் வரையில் ஏற்பட்டதே கிடையாது. இந்த வீட்டில் தொடர்ந்து இருப்பதையே நான் விரும்பு கிறேன். காமாட்சியம்மாளைப் பல விஷயங்களில் என் குருவாக நான் வரித்திருக்கிறேன். அவர்களிடமிருந்து நான் கற்றுக்கொள்ள வேண்டியது எவ்வளவோ இருக்கிறது."

"உன்னைச் சிஷ்யையாக ஏற்றுக் கொள்ளும் விருப்பமோ சம்மதமோ காமாட்சியம்மாளுக்கு இல்லாம லிருக்கலாம்,"

"துரோணரின் விருப்பத்தையும் சம்மதத்தையும் எதிர்பார்த்தா ஏகலைவன் அவருக்குச் சிஷ்யனானான்? சிரத்தையும் பக்தியும் மட்டும் இருக்குமானால் எந்தக் குருவையும் வழிபட்டு பாவித்துக்கொண்டே கற்கவேண்டி யதைக் கற்றுவிட முடியும்."

"அப்படியானால் இதைவிட மிகவும் செளகரியமான தனிமையான வேறு எந்த இடத்திலும் வசிக்க நீ விரும்பலையா?"

"நிச்சயமாக இல்லை. ராமன் இருக்கும் இடம் அயோத்தி...என்பதாக உங்கள் நாட்டில் பழமொழி உண்டு என்று கேள்விப்பட்டிருக்கிறேன். எனக்கும் அப்படித்தான். வசதிகளிலும், செளகரியங்களிலும் எற்கனவே நான் அலுத்துப் போய்விட்டேன்..."

கீழ்த்திசைக் கலாசாரத்திலும் நூல்களிலும் தத்துவங்களிலும், அவளுக்கு இருந்த ஆழமான பிடிப்பை அவள் பதில்களிலிருந்து சர்மாவால் ஊகித்துக் கொள்ள முடிந்தது,

"சரி! உன்னை அநாவசியமாக இப்பிடி எல்லாம் கேள்வி கேட்டுத் தொந்தரவு செய்யறதுக்காக என்னை மன்னிச்சுடும்மா. இந்த வீட்டில் தவறுதலாகவோ, எங்கள் அறியாமையாலோ, உனக்கு ஏதாவது அசெளகரி யங்கள் ஏற்பட்டால் தயவு பண்ணி அதைப் பொருட்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:துளசி_மாடம்.pdf/162&oldid=579878" இலிருந்து மீள்விக்கப்பட்டது