பக்கம்:துளசி மாடம்.pdf/165

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி 163


"நானும் கமலியுமா-மாத்தி-மாத்தி ஒட்டிப்போம். 'ரெண்டு பேருமே ஆட்டோமொபைல் எக்ஸ்பர்ட்ஸ். எந்த "ட்ரபிள் வந்தாலும் நாங்களே சமாளிச்சுப்போம்"என்றான் அவன்.

ஒருவாரம் என்று புறப்பட்டிருந்தாலும் அவர்கள் திரும்பிச் சங்கரமங்கலம் வரப் பத்து நாட்கள் வரை ஆகி விட்டன, பத்துநாள் வீடு வெறிச்சோடிப் போயிருந்தது.

மறுபடி அவர்கள் இருவரும் காரில் ஊர் திரும்பிய ஒரு பிற்பகலில்-காமாட்சியம்மாள் வீட்டுக் கூடத்தில் சாவகாசமாக அமர்ந்து தன்னை மறந்த லயிப்போடு வீணையில் தாயே யசோதா'வின் தோடியைப் பெருகச் செய்து கொண்டிருந்தாள். முதலில் காரிலிருந்து இறங்கி உள்ளே நுழைந்த கமலி கூடத்தில் வீணையும் கையுமாக அமர்ந்திருந்த காமாட்சியம்மாளைப் பார்த்ததும் சாட்சாத் சரஸ்வதி தேவியையே எதிரே பார்த்ததுபோல் பயபக்தியுடன் அப்படியே பிரமித்து நின்று விட்டாள்.

அந்த வீடே அப்போது தோடியிலும் கிருஷ்ண கானத்திலும் நிரம்பி வழிந்து கொண்டிருந்தது. கமலிக்கு அது ஒரு மெய்சிலிர்க்கச் செய்யும் அனுபவமாக இருந்தது. வீனையோடு அமர்ந்திருந்த கோலத்தில் காமாட்சி யம்மாளின் முகத்திலிருந்த அபூர்வமான தேஜஸ் அவளை மிகவும் கவர்ந்தது. அவள் கண்களை அந்தத் தோற்றம் கவர்ந்தது என்றால் செவிகளை அந்த வீணாகாணம் என்னும் மாதுர்ய மழை கவர்ந்திழுத்தது.

"என்னம்மா? இப்பத்தான் ஊர்லேயிருந்து வந்தியா? ஏன் இப்படிப் பிரமைபிடிச்ச மாதிரி மலைச்சுப் போய் நின்னுட்டே?”-என்று தற்செயலாக அங்கு வந்த சர்மா வினவியபின்தான் அவளுக்குத் தன் நினைவே வந்தது. அதற்குள் கையில் காரிலிருந்து எடுத்து வந்த பிரயானப் பெட்டிகளோடு ரவியும் வீட்டினுள் நுழைந்திருந்தான். கமலியோ வீணையோடு தரையில் பட்டுப்பாயில் அமர்ந் திருந்த காமாட்சியம்மாளின் தோற்றத்திலிருந்த

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:துளசி_மாடம்.pdf/165&oldid=579881" இலிருந்து மீள்விக்கப்பட்டது