பக்கம்:துளசி மாடம்.pdf/166

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

164 துளசி மாடம்


கவனத்தை இன்னும் மீட்க முடியாமல் அதிலேயே மணம் இலயித்துப் போயிருந்தாள். -

ஒரு புராதனமான வைதீகக் கலாசாரம் நிறைந்த தென்னிந்திய வீடும் அதன் அசெளகரியங்களும், முரண்டு களும் மிக்க குடும்பத் தலைவியும் பழைய தழும் பேறிய பழக்க வழக்கங்களும், கமலியைப் போன்ற ஓர் ஐரோப்பியப் பெண்ணுக்குப் பெரிய இடையூறுகளாக இருக்கும் என்று சர்மா எதிர்பார்த்ததற்கு நேர்மாறாக நிகழ்ச்சிகள் நடைபெற்றன. கமலி அந்த வீட்டையும், அதன் கலாசாரப் பிடிப்புக்களையும், காமாட்சியம் மாளின் கட்டுப்பாடுகளையும் நேசித்து மதித்துக் கடைப் பிடிக்கத் தொடங்கினாளே ஒழிய வெறுக்கவில்லை. அத வீட்டின் நடைமுறைகளுக்கு ஏற்ப அவள் தன்னை மாற்றிக் கொண்டாளே தவிரத் தன்னுடைய வசதி களுக்கு ஏற்ப அந்த வீட்டையும் அதன் பழங்காலத்து மனிதர்களையும் நடைமுறைகளையும் ஒரு சி றி து ம் மாற்ற முயலவில்லை. கமலியைப் பொறுத்துச் சர்மாவின் மனநிலை நெகிழ்ந்து மெல்ல மெல்ல அவள் மேல் அநுதாபமாக மாறியதற்கு அவளுடைய இந்த நனி நாகரிகப் பண்பே கரரணமாயிருந்தது.

ரவியும் கமலியும் பாண்டிச்சேரி, காரைக்கால் பகுதி களில் சுற்றுப் பயணம் செய்துவிட்டு ஊர் திரும்பிய தினத்தன்று இரவு தனியாக ரவியிடம் பேசிக் கொண் டிருந்தபோது, 'உங்கள் அம்மா வீணையும் கையுமாக அமர்ந்திருந்த காட்சி சரஸ்வதி தேவியே வாத்தியத் தோடு வந்து உட்கார்ந்து கொண்டிருந்த மாதிரித் தோன்றியது" என்று கமலி கூறினாள். .

'இப்போதெல்லாம் மிகவும் நவீனமான புதிய டிப்ளமளி, ஓயாமல் புகழ்ந்தே எதிர்ப்பையும் எதிரியை யும் அழிப்பதுதான் கமலி - என்று கேலியாக அதற்கு .

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:துளசி_மாடம்.pdf/166&oldid=579882" இலிருந்து மீள்விக்கப்பட்டது