பக்கம்:துளசி மாடம்.pdf/168

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

166 துளசி மாடம்


'உங்கள் அம்மா புடைவை கட்டிக்கொள்வதுபோல் நானும் கட்டிக்கொண்டு பார்க்க வேண்டும்போல் எனக்கு ஆசையாயிருக்கிறது. அதைக் கற்றுக் கொடுப்ப தற்கு நாளைக்கு வசந்தியை வரச் சொல்லியிருக் கிறேன்"-என்று தனது ஒரு விருப்பத்தைக் கமலி வெளியிட்டபோது அவனுக்கு வியப்பாகக்கூட இருந்தது. மடிசார் வைத்துப் புடவை கட்டுவது அநாகரிகமாகவும் பத்தாம் பசலித்தனமாகவும் ஆகி அப்படிக் கட்டு வதை, வழக்கமாகக் கொண்டவர்களே அதிலிருந்து விடுபட்டுத் தங்களை அந்நியப் படுத்திக்கொண்டு மாறி வரும்போது எங்கோ ஆறாயிரம் மைல்களுக்கு அப்பாலிருந்து வந்த ஒரு பிரெஞ்சு யுவதி இப்போது அதற்கு ஆசைப்படுவது மிகவும் விநோதமாயிருந்தது.

மறுநாள் காலையில் இறைமுடிமணி வடக்குத் தெருவில் மடத்து மனையில் தாம் தொடங்கும் புதுப் பலசரக்குக் கடைத் தொடக்க விழாவுக்கு வந்து கூப்பிட்டு விட்டுப் டோனார். அவர் வந்தபோது சர்மா எங்கோ வெளியே போயிருந்தார். ரவியிடமும் கமலியிடமும் தான் வந்த விவரம் சொல்லி விட்டுப் போயிருந்தார் அவர்.

தம்பி ! உங்க அப்பாருக்குச் சம்மதம் இல்லாம இருக்கலாம். ஆனா எங்க இயக்க வழக்கப்படி ஐயா படத்தைமாட்டி நல்ல ராகுகாலமாப் பாத்துத்தான் நான் கடை தொறக்கறேன். அது என் கொள்கை. சம்பந்தப்பட்ட விசயம். நட்புக்காக அவரை அழைக் கிறேன். முடிஞ்சா இவுங்களையும் கூப்பிட்டுக்கிட்டு வாங்க' என்று. கமலி பக்கம் சுட்டிக் காட்டி ரவியிடம் சொல்லி விட்டுப் போயிருந்தார் இறைமுடிமணி.

குமார் கல்லூரிக்கும், பார்வதி தனது பள்ளிக்கும். புறப்பட்டுப் போனபின் காலை ஒன்பதரை மணிக்கு, மேல் அப்பா வீட்டுக்குத் திரும்பி வந்ததும் ரவி இறை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:துளசி_மாடம்.pdf/168&oldid=579884" இலிருந்து மீள்விக்கப்பட்டது