பக்கம்:துளசி மாடம்.pdf/169

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி 167


முடிமணி தேடிவந்து விட்டுப் போனது பற்றி அவரிடம் தெரிவித்தான். -

அவன் தெரிவித்ததற்குச் சாதகமாகவோ, பாதகமா கவோ அப்போது ஒரு பதிலும் சொல்லாமல் கவனிக் காதது போல் இருந்தார் சர்மா. முகக்குறிப்பிலிருந்து அப்போது அவர் மிகவும் கலக்கமாகவும் மனம் குழம்பியும் இருப்பதுபோல் காணப்பட்டது.

"அவரோட இயக்க வழக்கப்படி ஐயா படம் மாட்டி ராகு காலத்திலேதான் கடை ஆரம்பிக்கிறாராம். அதை நெனைச்சுத் தயங்கிப் பேசாமெ இருந்துடாமே சிநேகி தத்தை மதிச்சு நீங்க ஒரு நடை வந்துட்டுப் போகணும்னு. சொல்லிவிட்டுப் போனார்.

“என்னப்பா? என்னமோ மாதிரி இருக்கேள்?...'

“எல்லாத் தகராறும் இதனாலேதான்! போறாக் குறைக்கு நான் அங்கே வேற போய் நின்னேன்னா அது வெறும் வாயை மெல்லற சீமாவையர் வாய்க்கு அவல் கிடைச்ச மாதிரி ஆயிடும்."

"எல்லாத் தகராறும்னா என்ன தகராறு அப்பா?”

"தேசிகாமணிக்கு அந்த வடக்குத்தெரு எடம் கிடைக்க விடாமப் பண்ணனும்கிறதுக்காக...அவனுக்கு நான் வாக்குக் குடுத்து அட்வான்ஸ் வாங்கினப்புறம்... சீமாவையர் அஹமத் அலிபாயைக் கூட்டிண்டு வந்து அவனுக்குத்தான் அந்த எடத்தை விட்டாகணும்னு ஒத்தைக்கால்லே நின்னார். நான் ஒத்துக்கல்லே. குடுத்த வாக்குப்படி தேசிகாமணிக்கு விட்டுட்டேன் மடத்திலே யிருந்தும் நான் செய்ததுதான் நியாயம்னு லெட்டர் வந்தடுத்து. சீமாவையரிடமும் அதைக் காமிச்சாச்சு. பார்த்துட்டு ஆகாசத்துக்கும் பூமிக்குமாகக் குதிகுதின்னு குதிச்சார், சாமி பூதம் இல்லேங்கற சு. ம. ஆளுக்கு மடத்து எடம் வாடகைக்குப் போறது பெரிய அக்ரமம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:துளசி_மாடம்.pdf/169&oldid=579885" இலிருந்து மீள்விக்கப்பட்டது