பக்கம்:துளசி மாடம்.pdf/170

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

168 துளசி மாடம்


-னார். என்னைத் திட்டினார். முந்தாநாள் மடத்து நிலங்களைக் குத்தகைக்கு விட்டபோதும் அவர் சொன்ன படி எதையும் கேக்காமே நான் நியாயமானவாளுக்காப் பார்ந்து விட்டேன். அதிலே வேறே அவருக்கு என் மேலே மகா கோபம். இதுக்கு முந்தின கூட்டத்திலே அவருக்கு வேண்டிய பினாமி ஆள்களாச் சேர்த்துண்டு வந்து அவாளுக்கே எல்லா நிலத்தையும் குத்தகை முடிச்சிடப் பார்த்தார். நான் விடலே. கூட்டத்தையே அன்னிக்கி ஒத்திப் போட்டுட்டேன்."

“சரி, இதிலே வருத்தப்பட றத்துக்கும் தயங்கறத் துக்கும் என்ன இருக்கு எது நியாயமோ அதைத்தானே செஞ்சிருக்கேள்?"... -

"வருத்தம் ஒண்னும் படலேடா! அங்கே போற துக்குத்தான் தயக்கமாயிருக்கு. ராகு காலம், ஐயா படம்னு நீவேற என்னென்னமோ சொல்றே ஒண்ணொண்ணும் சீமாவையருக்கு எனக்கெதிரா ஒரு கலகத்தை மூட்டறதுக்குத்தான் பிரயோஜனப்படும்... கொள்கை எப்படி இருந்தாலும் தேசிகாமணியைப் பொறுத்தவரை யோக்கியன்..."

"நீங்க தயங்கறது ாொம்ப வேடிக்கையாத்தான் இருக்குப்பா! அயோக்கியன் ஒருத்தன் என்ன நினைச்சுப் பானோன்னு பயந்து யோக்கியன் ஒருத்தனை மதிக்கவும் ஆதரிக்கவும் தயங்கி நின்னுடற சுபாவம் நம்ம தேசத் துக்கே ஸ்பெஷாலிட்டி"யாப் போச்சு. மனத்தினால் சமூக விரோதிகளுக்கும் அயோக்கியர்களுக்கும் பயந்து நடுங்கிக்கொண்டே கையால் தெய்வத்தைக் கூப்பித் தொழும் தேசம் இது. நியாய வேட்கையும் அந்த ரங்க சுத்தியோடு கூடிய சத்திய தரிசனமும் இல்லாத பக்திகூடப் பிரயோஜனமில்லாத விஷயம்தான். யாரோ ஒரு கெட்டவன் என்னமோ நினைச்சுக்கப் போறான் கிறதுக்காக நீங்க உங்க பரம சிநேகிதரோட அழைப்பைப் பொருட்படுத்தாம விடறது எனக்குப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:துளசி_மாடம்.pdf/170&oldid=579886" இலிருந்து மீள்விக்கப்பட்டது