பக்கம்:துளசி மாடம்.pdf/172

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

170 துளசி மாடம்


"நீங்களெல்லாம் கையால் நியாயத்தைத் தொழுது கொண்டே மனத்தால் அநியாயத்துக்குப் பயப்படு கிறீர்கள்"...என்று மகன் சொல்லிக் குத்திக் காட்டிய பின்பே உடனடியாக அவனோடு போவதற்குச் சர்மா இசைந்திருந்தார். உடை மாற்றிக்கொண்டு கமலியையும் அழைத்துவர மாடிக்குப் போயிருந்தான் ரவி.

ரவியும், கமலியும் மாடியிலிருந்து கீழே வருவதற்குள் உள்ளே போய் காமாட்சியம்மாளிடம் நாம் வெளியே புறப்படப் போவதாக ஒரு வார்த்தை சொல்லிக்கொண்டு வந்தார் சர்மா.

அவர் முதலில் நினைத்தபடிதான் நடந்தது. சர்மாவும் ரவியும், கமலியும் தெருவில் சேர்ந்து நடந்து போவதை ஒரு விநோதமான புது ஊர்வலத்தைப் பார்ப் பது போலதான் பார்த்தார்கள். தெருக்களின் அத்தனை வீடுகளும், ஜன்னல்கள், வாசல்கள், திண்ணைகளைத் திறந்து வைத்துக் கொண்டு அதற்காகவே காத்திருந்த மாதிரி நடந்து கொண்டன.

எதிரே ஊர்ப் புரோகிதர் ஜம்புநாத சாஸ்திரி வந்தார். சர்மாவையும், ரவியையும் விசாரித்தார். கமலியைப் பார்த்து விட்டுச் சர்மாவிடமே மறுபடியும், "அவா யாரு? புதுசா இருக்கே?' என்று கேட்டார் சாஸ்திரி.

“பிரான்ஸிலேருந்து வந்திருக்கா. நம்ம தேசம், கலாசாரம், பழக்க வழக்கம்லாம் பத்திப் படிச்சு எழுதிறதிலே ஆசை"-எனறு சர்மாவிடமிருந்து பதில் வந்தது. - +

"சரி அப்புறமா வந்து பார்க்கறேன்" என்று சாஸ்திரி விடை பெற்றுக் கொண்டு போனார். வடக்குத் தெரு முனையை அடைவதற்கு முன் இப்படியேயும் இதை விடச் சுருக்கமாகவும் இன்னும் இரண்டொரு சந்திப்புக்களுக்கும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:துளசி_மாடம்.pdf/172&oldid=579888" இலிருந்து மீள்விக்கப்பட்டது