பக்கம்:துளசி மாடம்.pdf/176

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

174 துளசி மாடம்


மணி சர்மா நின்றுகொண்டிருந்த புல்தரைக்குத் திரும்பி வந்தார். -

'நீ மட்டும் வந்து தலையைக் காட்டிட்டுப் போயி டாமத் தம்பியையும், இந்தப் பிரஞ்சுப் பெண்ணையும் உன் கூடக் கூட்டியாந்ததுலே எனக்கு ரொம்ப மகிழ்ச்சி விசுவேசுவரன்! நானே கண்டிப்பா எல்லாரும் வரணும்னு தான் நேரே வந்து சொல்லிப் போட்டு வந்தேன்."

- சிறிது நேர மெளனத்துக்குப் பின் சீமாவையர் தம்மிடம் நேருக்கு நேர் வந்து கூப்பாடு போட்டு மிரட்டியதைப் பற்றி இறைமுடிமணியிடம் கூறினார் சர்மா .

“அட அவன் கிடக்கிறான் விட்டுத் தள்ளப்பா... அந்த ஆளுக்கு அழிவு காலம் வந்திரிச்சுன்னுதான் நினைக் கிறேன்..."-என்று வெறுப்போடு பதில் வந்தது இறைமுடி மணியிடமிருந்து.

சர்மா, ரவி, கமலி, எல்லாரும் இறைமுடிமணியிடம் சொல்லி விடை பெற்றுக்கொண்டு புறப்பட இருக்கையில் தற்செயலாகக் கடையின் பெஞ்சில் ஒரு மூலையில் அடுக்கி யிருந்த புத்தகங்களை எடுத்துப் புரட்டினான் ரவி. -

1. ஆதிசங்கரரும் அவரது தத்துவங்களும்பிரும்மபூரீ ஸுப்ரஹ்மண்ய சாஸ்திரி எழுதியது.

2. போதாயணீயமும் பாஞ்சராத்ர வைகானஸ் வழி பாட்டு முறைகளும்.--

உபயவேதாந்தி பூரீ வைஷ்ணவ சண்டமாருதம்பிரதிவாதி பயங்கரம், கோளுர் கோபாலாச்சாரியார் எழுதியது.

3. அண்ட கோள விருத்தி-மதுரைத் தமிழ்ச்சங்கக் கலாசாலைப் பிரதம ஆசிரியர் பூர் உ. வே. திருநாராய ணய்யங்கார் சுவாமிகள் இயற்றியது.

என்று மூன்று புத்தகங்கள் அடுக்காக இருந்தன.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:துளசி_மாடம்.pdf/176&oldid=579892" இலிருந்து மீள்விக்கப்பட்டது