பக்கம்:துளசி மாடம்.pdf/177

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி 175


"என்ன தம்பீ? அப்பிடிப் பார்க்கிறீங்க? நம்பளுது தான். படிக்கிறத்துக்காக எடுத்து வச்சிருக்கேன்"என்று அர்த்த புஷ்டியோடு சிரித்துக் கொண்டே ரவியிடம் சொன்னார் இறைமுடிமணி.

"ஒண்ணுமில்லே... சும்மா பார்த்தேன்" என்றுகூறி விட்டுப் புறப்பட்டான் ரவி, தெருமுனை திரும்பியதும் தந்தையிடம் கேட்டான் அவன்.

"இதெல்லாம் ராகு காலத்திலே புதுக்கடை தொடங்கற ஒருத்தர். படிக்கிற புஸ்தகங்களான்னு நெனைக்கறப்போ ரொம்ப ரொம்ப ஆச்சரியமாத்தான் இருக்குப்பா!...”

"இதிலே ஆச்சரியமென்ன? எல்லா விஷயங்களையும் வெறுப்பில்லாமத் தெரிஞ்சுக்கனும்கிற சுத்தமான ஞான வேட்கை அவனுக்கு உண்டு. அவனோட இந்த முரண்பாடுகளுக்கு நடுவேயும் ஒரு முழுமை இருக்கு."

"அவை ரொம்பவும் ரம்யமான முரண்பாடுகளா இருக்குப்பா! இவரையும் நினைச்சுண்டுத் தெருத்திண்ணை யிலே ஊர்ச் சோம்பேறிகளோட சீட்டாடிண்டே புகையிலையைக் குதப்பித் துப்பிண்டு இருக்கிற சீமா வையரையும் நினைச்சா, ஞானவேட்கைக்கும் ஜாதிக்கும் சம்பந்தமே இல்லேன்னுகூடத் தோண்றதே? இல்லையா?"-ரவி கேட்டான். சர் மா அதற்கு அப்போது உடனே அவனிடம் பதில் எதுவும் சொல்ல வில்லை,

- ரவியின் வினாவுக்குத் தந்தை பிறகு பதில் சொல்லா விட்டாலும் அந்த வினாவைப்பற்றி அவர் சிந்திக்கிறார் என்பதே அவனுக்குத் திருப்தியாக இருந்தது. அதை உடனே அவர் பதில் சொல்லி மறுப்பார் என்று அவன் எதிர்பார்த்ததுதான் நடக்கவில்லை.

{} . 32 ઈ. む。

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:துளசி_மாடம்.pdf/177&oldid=579893" இலிருந்து மீள்விக்கப்பட்டது