பக்கம்:துளசி மாடம்.pdf/181

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி 179


"நீ கொல்லைப் பக்கத்து அறையில் போய் உட்கார் றப்போ பாருவை வேணும்னா ஸ்கூலுக்கு லீவு போடச் சொல்லி உனக்குத் துணைக்கு வச்சுக்கோ, பல்லாங்குழி, சோழி எல்லாம் ஆடலாம்" என்று சிரித்த படி கூறினாள் வசந்தி.

"துணை எதற்கு ? எனக்கென்ன பயமா ?” என்று கேட்டாள் கமலி, அவள் விரும்பியபடி அன்று முன்னிர வில் அவளைப் பூமிநாதபுரத்திலிருந்த பெரிய சிவன் கோயிலுக்கு அழைத்துப் போனாள் வசந்தி, கையில் தேங்காய் பழம். பூ ஊதுவத்தி அடங்கிய பூஜைக் கூடை யுடன் வெள்ளைக்காரி ஒருத்தி புடவையும் குங்குமத் திலகமுமாகக் கோவிலுக்கு வந்ததைப் பெரிய அதிசய மாகப் பார்த்தார்கள் சங்கரமங்கலம், பூமிநாதபுரம் கிராமத்து மக்கள். கோவிலிலிருந்த சிற்பங்களைப் பற்றி அவற்றின் திருவிளையாடல் கதைக் குறிப்புக்களை எல்லாம் வசந்தி கமலிக்கு விளக்கிக் கூறினாள்.

வசந்தியோடு கர்ப்பக் கிருகத்துக்கு நெருக்கமாக ஆலயத்திற்குள் சென்று சர்மாவின் குடும்ப rேமத்துக் காக என்று அர்ச்சனையும் செய்து வழிபட்டுப் பிரசாதம் வாங்கிக் கொண்டு திரும்பினாள் கமலி.

பூமிநாதபுரம் சிவன் கோவிலும் அதன் அழகும் அமைதியும், ஆயிரங்கால் மண்டப முகப்பிலிருந்த சிற்பங் களும் கமலிக்கு மிக மிகப் பிடித்திருந்தன.

17

கமலி தன் மனத்தின் உருக்கம் தெரியும் குரலில் வசந்தியிடம் சொன்னாள்

"உங்களுடைய பழைய கோவில்கள் கலைச் சுரங்கங் களாக இருக்கின்றன. ஆனால் உங்கள் நாட்டு மக்கள் இப்போது சினிமாத் தியேட்டர்கள் என்னும் புதிய

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:துளசி_மாடம்.pdf/181&oldid=579897" இலிருந்து மீள்விக்கப்பட்டது