பக்கம்:துளசி மாடம்.pdf/182

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

180 துளசி மாடம்


கோவில்களின் வாசலில் போய் பயபக்தியோடு நிற்க ஆரம்பித்து விட்டார்கள். பக்தி இடம் மாறிவிட்டது. கோயில்களும் தெய்வங்களும் தியேட்டர்களில் சிகரெட் புகையின் நெடி குமட்டும் புதிய சூழலில் பிரதிஷ்டை செய்யப்படுகிறார்கள் இன்று."

"சரியாகச் சொல்கிறாய் ! இங்கே கோயிலி லிருப்பதைவிட இதே நேரத்திற்கு இவ்வூர் ஆற்றங் கரையில் இருக்கும் டுரிங் தியேட்டரில் உள்ள கூட்டம் தான் அதிகம் கமலி."

"மாக்ஸ் முல்லர் காலமுதல் கிழக்கு நாடுகளின் கலா சாரத்தில் மேற்கே ஒரு மயக்கமும் பிரியமும் தோன்றி விட்டது. ஸ்ேக்ரட் புக்ஸ் ஆ. .ப் தி ஈஸ்ட் என்று வேதங்களையும் உபநிஷதங்களையும் மாக்ஸ் முல்வர் ஆக்ஸ்போர்டில் வால்யூம் வால்யூமாக மொழி பெயர்த்து அச்சிட ஆரம்பித்தது தொடங்கி மேற்கே யிருந்து கிழக்கே திரும்பிப் பார்த்தல் ஆரம்பமாகி விட்டது. ஆனால் அதே சமயம் கிழக்கே இருந்த நீங்கள் உங்களுடையவற்றை மறந்து ஆச்சரியத்தோடு மேற்கே திரும்பிப் பார்க்கவும் மேற்கின் லெளகீக வாழ்வை வியக்கவும் விரும்பவும் ஆரம்பித்து விட்டீர்கள்." w

"உண்மைதான் கமலி ஆனால் இன்றைய இந்தியா முன்னைவிட இன்னும் லெளகீகமாகி விட்டது. சுதந்திர இந்தியாவின் மிகப் பெரிய வறுமை கலாசார வறுமை தான் வெறும் வயிற்றுப் பசியைவிடக் கலாசாரப் பசி மிகவும் பொல்லாதது."- ' .

"ஆமாம் : கலாசார வறுமையும், ஆன்மீக வறுமை யும பயங்கரமானவை. ஒரு நாட்டைப் படுகுழியில் வீழ்த்தக் கூடியவை." -:

-இந்த உரையாடல் பூமிநாதபுரம் கோயிலிலிருந்து திரும்பும்போது அவர்களுக்குள்ளே நடந்தது. கமலி ஒரு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:துளசி_மாடம்.pdf/182&oldid=579898" இலிருந்து மீள்விக்கப்பட்டது