பக்கம்:துளசி மாடம்.pdf/183

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி 181


முழுமையான இந்துவாக-- இந்தியப் பெண்ணாக. நடந்து கொள்ளுவதில் காட்டும் தாகத்தையும் தவிப்பை யும் ஒவ்வொரு கணமும் கூர்ந்து கவனித்தாள் வசந்தி.

"பிறவியிலேயே இந்துக்களாகிய எங்களுக்கு இருப் பதை விடப் புதிதாக உங்கள் ஊரிலிருந்து வருகிற ஹரே கிருஷ்ணா இயக்கத்தினருக்கு அதிக இந்துமதப் பற்று இருப்பது ஆச்சரியமான விஷயம்."

"சீர்த்திருத்தம்-மறுமலர்ச்சி என்ற பெயரில் ஒரு புனிதமான பழைய கலாசாரத்தின் கங்கைப்பெருக் கிலிருந்து அவசர அவசரமாகக் கரையேறிச் சுளிரென்று வெயில் காய விரும்புகிறீர்கள் நீங்கள், நாங்களோ ஆவலோடு ஓடிவந்து அந்தப் புனிதமான கங்கைப் பெருக்கில் நீராடக் காத்திருக்கிறோம். இந்துவாகப் பிறப்பவன் மட்டுமே முழு இந்துவாக இருப்பது இல்லை. எவன் ஒருவன் முழு இந்துவாகக் கனிந்து வாழ்கிறானோ அவனே முழு இந்துவாக இருக்க முடியும். இந்து மதப் என்பது ஒருமதம் மட்டுமில்லை. மிகவும் பண்பட்ட ஒரு வாழ்க்கை முறை." -

"கங்கையில் யார் தேடிப்போய் நீராடுகிறானோ அவனைத்தான் அது நனைக்க முடியும் கமலி !'

"கங்கை என்பது உங்கள் தேசத்தின் வடக்கே ஒடும் ஒரு நதி மட்டுமில்லை. அது இந்தியா முழுவதும் பரவியுள்ள ஒரு பவித்திரத் தன்மையின் பொதுப்பெயர் என்றே நான் நினைக்கிறேன். அதன் வியாபகமே உங்கள் நாட்டில் ஒரு கலாசார ஐக்கியமாக இருந்திருக்க வேண்டும். தேசத்தின் பல பகுதிகளில் முதலில் கங்கை நீரைக் கொணர்ந்து ஊற்றித்தான் புதிய ஏரிகள் குளங்கள் வெட்டியதாக உங்கள் வரலாறே சொல்கிறது. இமயமலை முதல் கன்னியாகுமரி வரை எந்த இந்து இறந்தாலும் கடைசியாக ஒரு துளி கங்கைத் தண்ணிரைப் பருகி விட்டு இறப்பது என்பது வேறு உங்களிடையே வழக்கமாயிருக்கிறது."

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:துளசி_மாடம்.pdf/183&oldid=579899" இலிருந்து மீள்விக்கப்பட்டது