பக்கம்:துளசி மாடம்.pdf/184

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

182 துளசி மாடம்


இதைச் செவிமடு த்ததும் தனக்குச் சொந்தமான ஒரு புனித வரலாற்றை அந்நியர் ஒருவர் உணர்ந்து சொல்லக் கேட்கும் சிலிர்ப்பை வசந்தி அப்போது அடைந்தாள்.

அடுத்தவாரம் அவள் பம்பாய் போகிறவரை கமலியோடு இப்படிப் பல மாலை வேலைகளைச் செலவிட்டாள். மனம்விட்டு அவளோடு உரையாடி மகிழ்ந்தாள்.

அவள் பம்பாய் போன இரண்டாம் வாரமோ மூன்றாம் வாரமோ எதிர்பாராத விதமாய் பூர் மடத்தி லிருந்து அவசரமாக ஒரு தந்தி வந்து காமாட்சியம்மா ளுடன் சர்மா-அங்கே புறப்பட்டுப் போயிருந்தார். அவர் திரும்ப ஒரு வாரத்திற்கு மேல் ஆகும் என்று தெரிந்தது. கமலியும், ரவியும், குமாரும், பார்வதியும்தான்

சங்கர மங்கலத்திலிருந்தார்கள். காமாட்சியம்மாள் வீட்டுப் பொறுப்பைப் பார்வதியிடம் விட்டிருந்தாள். மடிக் குறைவாகச் சமையலறையை உபயோகப்

படுத்தாமல் கூடத்து மேடையிலேயே எல்லாம் செய்து முடித்துக் கொள்ள வேண்டும் என்று பாருவிடம் புறப்படுவதற்குமுன் கண்டிப்பாகச் சொல்லிவிட்டுப் போயிருந்தாள் காமாட்சியம்மாள்.

சர்மாவும், காமாட்சியம்மாளும் புறப்பட்டுப் போன மூன்றாம் நாளோ, நான்காம் நாளோ-யாரும் எதிர் பாராத அசம்பாவிதம் ஒன்று அந்த வீட்டில் நடந்து பொருள் சேதமும் மிகுந்த மனக் கஷ்டமும் உண்டாக் கியது. திட்டமிட்டு உண்டாக்கிய நஷ்டம்தான்-யார் அதைச் செய்திருக்கலாம் என்பதும்கூடப் புரிந்தது. ஆனால் நேரடியாக அந்த ஆள் மட்டும் அகப்படவே யில்லை. வீட்டுப் பின்புறம் தோட்டத்திற்கும் மாட்டுத் தொழுவத்திற்கும் நடுவே ஒரு பெரிய வைக்கோற் படைப்பு இருந்தது. அதிகாலை மூன்று மணி சுமாருக்கு யாரோ அதற்கு நெருப்பு வைத்துவிட்டு ஒடியிருந்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:துளசி_மாடம்.pdf/184&oldid=579900" இலிருந்து மீள்விக்கப்பட்டது