பக்கம்:துளசி மாடம்.pdf/188

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

186 துளசி மாடம்


பட்டுப் பதினெட்டு முழம் புடவையை மடிசார் வைத்துக் கட்டிக் கொண்டு கோபூஜையும், துளசி பூஜையும் செய்து வந்த கமலி தீப்பிடித்த தினத்தன்று பூஜை செய்வதற்குப் பசு இல்லாமல் திக்பிரமை பிடித்ததுபோல் இருந்தாள். நல்ல வேளையாகத் துளசி ஒரு பக்கம் பட்டுப் போயிருந் தாலும் மறுபகுதியிலும் அடிப்பக்கமும் தளிர்த்து விடும். என்பதற்கு அடையாளமான பசுமை இருந்தது. தீப்பிடித்த தினத்தன்றும் அவள் துளசி பூஜையை நிறுத்த, வில்லை.

இந்த அசம்பாவிதம் நடந்த இரண்டு நாட்களில் சர்மாவும், காமாட்சியம்மாளும் ஊர் திரும்பியிருந்தனர். இது தெரிந்ததும் சர்மா ஒரிரு கணங்கள் ஒன்றும் பேசாமல் இருந்தார். அப்புறம் அப்படி ஒன்று நடந்: ததை மறந்தது போல் சகஜமாக இருக்கத் தொடங்கி விட்டார் அவர். அப்பாவின் இந்த இயல்பை ரவி ஒரு பழைய இதிகாச நிகழ்ச்சியோடு ஒப்பிட்டு நினைத்தான்.

ஒரு சமயம் ராஜரிஷி ஜனகரும், அவரை ஒத்த பெரிய அறிஞர்கள் சிலரும் மிதிலை நகருக்கு வெளியே ஓர் அழகான அமைதியான தனியான சோலை சூழ் இருக் கையில் அமர்ந்து வேதாந்த தத்துவ விசாரணையில் ஈடுபட்டிருந்தனர். அவர்களுக்கு இவ்வுலக நினைவே இல்லை. ஈடு இணையற்ற அறிவுத் திளைப்பு.

அப்போது யாரோ ஒர் ஆள பரபரப்பாக ஓடிவந்து "மிதிலை நகரம் தீப்பற்றி எரிகிறது"...என்று ஜனகரிடம் கூறினானாம். அறிவு மயமான உரையாடலில் திளைத் திருந்த ஜனகர் சிறிதும் பரபரப்படையாமல் பதறாமல், "எரிந்தால் இழக்கும்படியான மீட்க முடியாத எந்த உயர்ந்த பொருளையும் நான் மிதிலையில் விட்டுவிட்டு வரவில்லையே ?"-என்று பதிலிறுத்தாராம். ‘மிதிலை எரிந்திட வேதப் பொருளை வினவும் ஜனகன் மதி’என்று மகாகவி பாரதியார் இந்த எல்லையற்ற அறிவுத்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:துளசி_மாடம்.pdf/188&oldid=579904" இலிருந்து மீள்விக்கப்பட்டது