பக்கம்:துளசி மாடம்.pdf/189

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி 187


திளைப்பின் உச்ச நிலையை விவரித்து வியந்திருக்கிறார். ராஜ பதவியில் ஜனகருக்கு இருந்த பற்றற்ற நிலையையும் அதே சமயம் ஞானத்தில் அவருக்கு இருந்த அளவற்ற ஈடுபாட்டையும் இந் நிகழ்ச்சியால் தெரிந்து கொள்ள முடிந்தது.

வீட்டில் வைக்கோற் படைப்பு எரிந்து ஏற்பட்ட இழப்புக்களைக் கேட்டபோது அப்பா ஜனகர் மாதிரி இருந்ததைக் கண்டான் ரவி.

18

வைக்கோற் படைப்பும், பசுமாடுகளும் எரிந்து போனது பற்றி அப்பாவும் உள்ளுற வருந்தியிருக்கலாம்! ஆனால் அது தண்ணிரில் அம்பெய்த மாதிரிச் சுவடு தெரியாமல் உடனே மறைந்து போயிருந்தது. அது பற்றிய ஊர் வம்பும் அவர் காதில் விழுந்தது. அவர் அதைப் பெரிதாகப் பொருட்படுத்தவில்லை

கறக்கிற நிலையிலுள்ள வேறு பசு ஒன்றை அனுப்பி வைக்கும்படி பூமிநாதபுரத்திலுள்ள தெரிந்த மனிதர் ஒருவருக்கு உடனே தகவல் மட்டும் சொல்லி அனுப் பினார்.

அம்மா அதற்கு நேர்மாறாக நடந்து கொண்டாள். ஊர் வம்பு அவள் காதிலும் விழுந்தது.

“மடத்து மனையைத் தெய்வ நம்பிக்கை இல்லாத வனுக்கு வாடகை பேசிவிட்டார். இங்கே வீட்டிலேயும் தீட்டுக் கலக்கவிட்டார். தெய்வத்துக்கே பொறுக் கலை'ன்னு ஊர்லே பேசிக்கறாடி காமு" என்று பக்கத்து வீட்டுப் பாட்டி சொல்லியபின் பார்வதியை விசாரித்துக் கமலிதான் ஊரில் இல்லாதபோது கோ பூஜை, துளசி பூஜை எல்லாம் செய்த விவரம் உட்பட அனைத்தும் காமாட்சியம்மாள் தெரிந்து கொண்டு விட்டாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:துளசி_மாடம்.pdf/189&oldid=579905" இலிருந்து மீள்விக்கப்பட்டது