பக்கம்:துளசி மாடம்.pdf/191

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி 189


பத்துப் பதினைந்து நாட்களிலேயே வாடியிருந்த பகுதி தவிர மறுபகுதியில் துளசி பொல்லென்று புதுத் தளிர்விட்டுப் பொலியத் தொடங்கிவிட்டது. பூமிநாத புரத்திலிருந்து வந்த புதுப் பசுவும் வீட்டில் ஏற்கனவே எஞ்சியிருந்த கன்றுகளுமாகக் கூரையோ கீற்றோ இல்லாமல் ஆஸ்பெஸ்டாளில் போடப்பட்டிருந்த புது மாட்டுக் கொட்டத்தை நிறைத்துக் கொண்டிருந்தன. ஆனாலும், ஊர் வ ம் பி லு ம் அரட்டைகளிலும் திண்ணைப் பேச்சிலும் இன்னும் கமலியின் தலைதான் உருண்டது. அவள்தான் வம்புக்கு இலக்காக இருந்தாள்.

"பரம வைதீகரான விகவேகவர சர்மா வீட்டிலே துளசிச்செடி பட்டுப் போனதற்கும் பசுமாடு எரிந்து போனதற்கும் கமலிதான் காரணம்"-என்று வெளியே இருப்பவர்கள் கண்மூடித்தனமாகப் பேசியது பேதா தென்று வீட்டுக்குள்ளேயே காமாட்சியம்மாள் வெளிப் படையாகவும், சில சமயங்களில் ஜாடைமாடையாகவும் இப்படிப் பேசத் தொடங்கியிருந்தாள். சர்மாலுடம் அவள் சண்டை பிடித்துப் பார்த்தாள். அவர் அதற்கு அசையவில்லை. கமலியின் பவ்யம், பணிவு, மரியாதை, காரண காரியம் கேட்காமலே இந்துமதத்திலும், இந்தியக் கலாசாரத்திலும் உடனே விரைந்து கரையத் துடிக்கும் அவள் மனநிலை- எல்லாமே சர்மாவுக்குப் பிடித்திருத்தன. தங்களுக்கு ஒத்துவராததை எல்லாம் மூட நம்பிக்கை என்று ஒதுக்கி விட்டு எஞ்சியவற்றுக்கும் தட்டிக் கழிக்கும் நோக்குடன் காரண காரியம் கேட்டுக் கொண்டு தயங்கி நிற்கிற கலாசாரத்தை இழக்கத் தயாரான இந்தியர்களிடையே விஞ்ஞானத்திலும் ஞானத்திலும் மிக வளர்ந்த தேசத்திலிருந்து வந்திருக்கும் ஒர் இளம் பெண் நடந்து கொள்ளும் அடக்கமும் நளின மும் அவரை அவள் மேல் மரியாதை கொள்ளச் செய்திருந்தன.

கமலி மடிசார் வைத்துக் கொண்டு துளசி பூஜை, கோபூஜை செய்ததையும் தரையில் உட்கார்ந்து இலை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:துளசி_மாடம்.pdf/191&oldid=579907" இலிருந்து மீள்விக்கப்பட்டது