பக்கம்:துளசி மாடம்.pdf/192

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

190 துளசி மாடம்


போட்டுச் சாப்பிடப் பழகிக் கொண்டதையும், துர்க்கா சப்த ஸ்துதி ஸ்தோத்திரம் சொல்வதையும், காமுவைப் போலவோ ஊராரைப் போலவோ, வேடிக்கை யாகவோ வம்பு பேசும் விஷயமாகவோ சர்மா கவனிக்க வில்லை. அதிலுள்ள அந்தரங்க சுத்தியையே கவனித் தார். மனிதர்களின் அந்தரங்க சுத்தியை மதிக்கத் தெரியாதவர்கள் யாராயிருந்தாலும் அவர்களை நாகரிக மற்றவர்களாக எண்ண ஒரு போதும் அவர் தயங்கிய தில்லை.

தினசரி காலையில் கமலி யோகாசனங்கள் செய்கிறாள் என்பது அவருக்கே தெரியும். டென்னிஸ் விளையாடும்போது பெண்கள் அணிவது போன்ற ஒருவகை உடையில்...அரை டிராயர், பனியனோடு

அவள், பத்மாசனமோ, சிரசாசனமோ போட்டுக் கொண்டிருந்தபோது ஒரு நாள் பாருவைத் தேடி மாடிப் படியேறிய காமாட்சியம்மாள் அதைப் பார்த்து

விட்டாள். உடனே எதோ பார்க்கக் கூடாததைப் பார்த்து விட்டதைப்போல் பதற்றத்தோடு கீழே இறங்கிய காமாட்சியம்மாள் கொல்லையில் பூஜைக்காகத் தோட்டத்தில் பூக்கொய்து கொண்டிருந்த சர்மாவிடம் போய், "இதோ. பாருங்கோ இதெல்லாம் உங்களுக்கே நன்னா இருக்கா? சின்ன வயசுப் பொம்மனாட்டி மாடியிலே நட்ட நடுக்கூடத்திலே அரை நிஜாரைப் போட்டுண்டு தொடை தெரியறாப்பல மார்ச் சட்டை யோட தலைகீழா நின்னுண்டிருக்காளே?"...என்று இரைந்தாள். சர்மா புன்முறுவல் பூத்தபடி, "கமலி யோகாசனம் போடறா. உனக்குப் பிடிக்கலேன்னா அதையெல்லாம் நீ ஏன் போய்ப் பார்க்கணும்?"...என்று பதிலுக்குக் கேட்டார்.

சங்கரமங்கலத்தில் "தாசிமார் தெரு" என்றொரு பழைய பகுதி இருந்தது. ஆந்தத் தெருவில் அந்த நாளில் சிவராஜ நட்டுவனார் என்றொரு பிரபலமான நடன

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:துளசி_மாடம்.pdf/192&oldid=579908" இலிருந்து மீள்விக்கப்பட்டது