பக்கம்:துளசி மாடம்.pdf/193

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி 191


ஆசிரியர் இருந்தார். கமலி பரதநாட்டியமும், கர்நாடக சங்கீதமும் கற்க ஆவல் காட்டியதன் காரணமாக அந்தத் தெருவைச் சேர்ந்த ஒரு பழைய பாகவதரையும், சிவராஜ நட்டுவனாரையும் ஏற்பாடு செய்திருந்தான் ரவி. வாரத் தின் முதல் மூன்று நாள் சங்கீதத்தையும் மற்ற மூன்று நாள் நாட்டியத்தையும் மீதமுள்ள ஒரு நாளில் சர்மா விடம் சமஸ்கிருத மொழி நுணுக்கங்களையும் கற்று வந்தாள் கமலி. முதலில் பாகவதரும் நட்டுவனாரும் சர்மாவின் வீட்டு மாடியிலேயே கமலிக்குக் கற்றுக் கொடுத்தார்கள்.

“அவளுக்கு ஆத்திரம்னா அங்கே தேடிப் போய்க் கக்துக்கட்டும். நாட்டியம், சங்கீதம்னு வழக்கமில்லாத வழக்கமாக் கண்ட மனுஷாளை இந்தாத்துக்கு உள்ளே விட ஆரம்பிச்சா அப்புறம் ஊர் சிரியாச் சிரிக்கும்"என்று காமாட்சியம்மாள் சண்டைக்கு வரவே நட்டுவ னாரும், பாகவதரும் வீட்டுக்கு வருவது நிறுத்தப்பட்டு அவர்கள் வீடுகளுக்குக் கமலி போ வ .ெ த ன் று ஏற்பாடாயிற்று.

சர்மாவும், ரவியும் ஒருநாள் மாலை பேசிக் கொண்டே ஆற்றங்கரைக்குப் டோகும்போது தற்செயலாக ஒரு விஷயம் சர்மாவிடமிருந்து ரவிக்குத் தெரிய வந்தது. சர்மாவே முன் வந்து அதை அவனிடம் தெரிவித்தார். . X

“இந்த ஊர் ரொம்பப் பொல்லாதது ரவி! திடீர்னு பூரீ மடத்திலேருந்து தந்தி குடுத்து என்னை வரச் சொல்லியிருந்தாளே, எத க்குன்னு உனக்குத் தெரியுமா? நீயா இதுவரை என்கிட்டக் கேழ்க்கலைன்னாலும் நானா இப்போ சொல்றேன். நீயும் கமலியும் இங்கே வந்து தங்கியிருக்கிறதைப் பத்தியும் தேசிகாமணிக்கு மடத்துமனையை வாடகைக்கு விட்டிருக்கிறதைப் பத்தியும் மொட்டைக் கடிதாசும் தந்தியுமா எழுதிப் போட்டு என்னை உடனே ரீமடம் பொறுப்பிலேருந்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:துளசி_மாடம்.pdf/193&oldid=579909" இலிருந்து மீள்விக்கப்பட்டது