பக்கம்:துளசி மாடம்.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18 துளசி மாடம்


இவர்கள் இருவரும் இப்படிப் பேசிக்கொண்டிருக்கும் போதே அடேடே...யாரு? சர்மாவாளா? வாங்கோ..." என்று கூறியபடியே வேணுமாமா உள்ளே நுழைந்தார். பாரிஸிலிருந்து ரவியின் கடிதம் வந்த விவரத்தைச் சொல்லி வேணுமாமாவிடமும் அதைப் படிக்கக் கொடுத்தார் சர்மா.

படித்து முடித்து விட்டுச் சிரித்துக் கொண்டே 'காந்தர்வ விவாகம்னு ஒண்னு நம்ம சாஸ்திரங்கள் ளேயே ஒப்புக் கொள்ளப்பட்டிருக்குன்னு உங்களுக்கே அழகா ஞாபகப்படுத்தியிருக்கானே பிள்ளையாண்டான்?' என்றார் வேணுமாமா.

சர்மா தயங்கித் தயங்கி சுரேஷ் மூலமாகப் பாரிஸி லேயே ரவியைச் சந்தித்து அவன் மனத்தை மாற்ற முயற்சி செய்ய இயலுமா என்ற தம் யோசனையை வேணுமாமா விடமும் கூறினார்.

"அது சாத்தியமே இல்லை சர்மா...! அங்கே எல்லாம் ஒருத்தரோட தனி வாழ்க்கையிலே இன்னொருத்தர் தலை யிடறதை அநாகரிகமா நெனைப்பா. சுரேஷ் அவனுக்குக் கலியாணமாகி ஒரு குழந்தையும் பொறந்தப்பறம் டெல்லிலே பார்த்துண்டிருந்த வேலைலேருந்து அப்பிடியே யுனேஸ்கோவுக்கு செலக்ஷன் ஆகி நியூயார்க் போனான். அப்புறம் இப்போ பாரிஸ் வந்திருக்கான். இப்படி எல்லாம் இல்லாமே கட்டைப் பிரம்மச்சாரியா அங்கே போயிருந் தான்னா இன்னிக்கு நீர் இருக்கிற நிலைமையிலே நானும் இருக்க நேர்ந்திருக்கலாம். ஒரு பிரெஞ்சு மருமகளையோ, அமெரிக்க மருமகளையோ என் வீட்டுக்குள் வரவேற்கிற நெலைமையை நானே எதிர்த்தாலும் தவிர்க்க முடியாமல் போயிருந்திருக்கும்."

சர்மாவின் இதயத்தில் அந்தப் பிரச்னை ஏற்படுத்தி யிருக்கிற கனத்தைக் குறைத்து இலகுவாக்க விரும்பியவர் போல வேணுமாமா இப்படிக் கூறியிருந்தார். சர்மாவின் பயங்கள், தயக்கங்கள், தர்மசங்கடங்கள் எல்லாம் வேணு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:துளசி_மாடம்.pdf/20&oldid=579735" இலிருந்து மீள்விக்கப்பட்டது