பக்கம்:துளசி மாடம்.pdf/201

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி 199


"அதெப்படி முடியும்? நாம மனசறிஞ்சே." என்று விடாமல் மேலும் ஏதோ தொண தொணத்தாள் பாட்டி. .

செளகரியப் படாட்டா வேறே எங்கே தங்கனுமோ தாராளமா அங்கே போய்த் தங்கிக்கலாம் நீங்க... -- என்று தன் வாயால் முந்திக் கொண்டு சொல்ஓ விடாமல் பாட்டியே அவள் வாயால் அதை சொல்லட்டும் என்று பொறுமையாகக் காத்திருந்தார் சர்மா.

"நான் சங்கர சுப்பன் ஆத்துலே போய்த் தங்கிக்க. லாம்னு பார்க்கறேன்.'

நீங்களே இப்படிச் சொல்றப்போ நான் உங்களைப் போக விடமாட்டேன்னா தடுக்க முடியும்? அப்புறம் உங்க இஷ்டம்'- என்று அந்த உரையாடலை முடிக்க. வேண்டிய இடத்தில் கச்சிதமாக முடித்தார் சர்மா, பாட்டி புறப்பட்டுப் போய் விட்டாள். ஆனால் காமாட்ஓ யம்மாளுக்குக் கோபம் பொத்துக்கொண்டு வந்து விட்டது.

இருபது வருஷமா ப்ரம்மோத்லவத்துக்கு வந்து

இந்தாத்துலே தங்கிண்டிருந்த பெரியம்மாவை ஒரு நிமிஷத்திலே எடுத்தெறிஞ்சு பேசித் துரத்தி விட்டுட் டேளே ? எங்காத்து மனுஷாள்னா உங்களுக்கு அத்தனை, எளக்காரமோ ? புதுசு புதுசா யார் யாரோ இங்கே வந்து மினுக்கதசங்கறதுக்காகப் பழைய பந்துக்களைத் துரத்தணுமா இப்பிடி '

நான் ஒண்னும் யாரையும் துரத்தலை! அவளா வந்து என் ஆசாரத்துக்கு இனிமே_இங்கே ஒத்துக்காது. நான் சங்கர சுப்பனாத்துக்குப் போலாம்னு பார்க்க றேன்'னாள். அப்புறம் நான் எண்ண பண்ண முடியும் ? இல்லே! நீங்க கண்டிப்பாப் போகக்கூடாது. இங்கேதான் தங்கனும்’னு அவ கால்லே விழுந்து என்னைக் கெஞ்சச் சொல்றியா ? அவளே நான் போகணும்னா சரி! உங்க இஷ்டம்னேன்."

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:துளசி_மாடம்.pdf/201&oldid=579917" இலிருந்து மீள்விக்கப்பட்டது