பக்கம்:துளசி மாடம்.pdf/202

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

200 துளசி மாடம்


'ஊரெல்லாம் போய் என் தலையை உருட்டப் போறா ? ஏற்கெனவே ஊர்லே உங்க தலை உருண்டுண் டிருக்கிறது போறாதுன்னு இதை வுேற பண்ணி யிருக்கேள்...'

சர்மா இதற்குப் பதில் பேசவில்லை. பெண்களுடன் பேசும்போது ஒர் எல்லையில் ஆண்கள் மெளனத்தைக் கடைப்பிடிப்பது அந்தப் பூசலை ஒரு கலகமாக நீடிக்க விடாமல் தடுக்க உதவும் என்பது சர்மாவின் நம்பிக்கை.

ஆனால் கமலியின் பொருட்டு அவளை மையமாக வைத்து இப்படி ஒரு குடும்பக் கலகம் நடந்தது என்பதை அவளை அறிய விடாமல் பார்த்துக் கொண்டார் சர்மா. "நீ பண்ற கூத்தாலேதான் இப்பிடியெல்லாம் நடக் கறது. இப்பிடி எங்க பெரியம்மா வயித்தெரிச்சலை நீ ஏண்டா கொட்டிக்கனும்?" - என்று ரவியைச் சண்டைக்கு இழுத்துப் பார்த்தாள் காமாட்சியம்மாள்.

'நான் யார் வயித்தெரிச்சலையும் கொட்டிக்கலே அம்மா! உங்க பெரியம்மா அவளாப் புறப்பட்டுப் போனா அதுக்கு யார் என்ன பண்ண முடியும்? கமலி உன்னைத் தெய்வமா மதிச்சுப் பேசறா... நீதா ன் அநாவசியமா இப்போ அவ வயித்தெரிச்சலைக் கொட்டிக்கிறே" என்றான் ரவி.

"ஆமாண்டா! இவ ஒருத்தி வந்து என்னைத் தெய்வமா மதிக்கலேன்னுதான் நான் ராப்பகலாத் தவிச்சுண்டிருந்தேன். போடா போக்கத்தவனே...'

"எங்கேம்மா போகச் சொல்றே. மறுபடியும் பாரிஸுக்கு உடனே புறப்பட்டுடட் டுமா?"

காமாட்சியம்மாள் ஏதோ காரியமிருப்பதுபோல் பேசாமல் உள்ளே போய்விட்டாள்.

கமலியின் புடிப்பு மட்டும் தடங்கல் இல்லாமல் சர்மா விடம் தொடர்ந்தது. அன்று ஆனந்தவர்த்தனரின்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:துளசி_மாடம்.pdf/202&oldid=579918" இலிருந்து மீள்விக்கப்பட்டது