பக்கம்:துளசி மாடம்.pdf/204

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

202 துளசி மாடம்


பதங்கள், எட்டு, ஒன்பது, பத்து எண்களுக்கு அந்த மூன்று: மொழிகளிலும் ஒரே விதமாக அமைந்திருப்பதைக் கண்டு சர்மா விவரிக்க முடியாத மகிழ்ச்சியை அடைந்தார். ஒன் என்ற ஆங்கிலப் பதத்தையும் ஒன்று என்ற தமிழ்ப் பதத்தையும் கூட ஒப்பிட்டு விளக்கினாள் அவள். அங்கே தங்கியிருக்கிற அந்த ஓராண்டுக்குப் பயன்படட்டும் என்று ரவி சென்னையிலுள்ள பிரிட்டிஷ் கவுன்ஸில் லைப்ரரியிலும், அமெரிக்கன் செண்டர் லைப்ரரியிலும், போஸ்டல் மெம்பர் ஷிப் எடுத்திருந்தான். புத்தகங். களைத் தபாலில் பெற்றுக் கொள்ள வசதியாயிருந்தது. ஒரிரு மாதங்களுக்கு இடையே ரவியும், கமலியும் அவ்வப் போது மேற்கொண்ட சில பிரயாணங்கள் ஐந்து நாட்கள், பத்து நாட்கள் என்று ஆயின.

அப்படி ஐந்து நாட்கள், பத்து நாட்கள் ரவியும் கமலியும், ஊரிவில்லாமல் போகும்போது வீடே வெறிச் சோடிப் போனாற் போலாகிவிடும் சர்மாவுக்கு. கமலியும் ரவியும் ஊரிலிருந்த நாட்களில் ஒன்றில் இறைமுடிமணி தம்முடைய பகுத்தறிவுப் படிப்பகத்தில் கமலி தமிழில் பேசும் கூட்டம் ஒன்றிற்கு ஏற்பாடு செய்திருந்தார். கூட்டத்திற்கு நல்ல விளம்பரம் செய்யப் பட்டிருந்தாலும், ஒரு பிரெஞ்சுக்காரி தமிழில் பேசப் போகிறாள் என்பதாலும் நிறையப்பேர் திரளாக வந்திருந்தார்கள். - -

இறைமுடிமணி கமலியை அறிமுகம் செய்து வைத் தும் பேசும்போது ஒளிவு மறைவின்றி அவள் விரைவில் விசுவேசுவர சர்மாவின் மருமகள் ஆகப் போகிறாள் என்னும் பொருள் தொனிக்கப் பேசியிருந்தார். அந்தக் கலப்புத் திருமணத்திற்கு அட்வான்சாகப் படிப்பகத்தின் சார்பில் வாழ்த்துக் கூறுவதாகவும் சொல்லியிருந்தார்.

'திராவிட மொழிக் குடும்பம்' என்ற தலைப்பில் தமிழ் மொழியைப் பற்றிய அறிவுப்பூர்வமான மொழி யியல் கணிப்பை விவரித்தாள் கமலி. அவள் பதினைந்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:துளசி_மாடம்.pdf/204&oldid=579920" இலிருந்து மீள்விக்கப்பட்டது