பக்கம்:துளசி மாடம்.pdf/209

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி 207


இருந்ததைப் பயன்படுத்தி அவன் மூலம்தான் வைக்கோற் படைப்புக்குத் தீவைக்க ஏற்பாடு செய்திருந்தார் என்ற இரகசியம் ஏற்கெனவே சர்மா காதுக்கு எட்டியிருந்தது.

ரவி கேட்டான் "நான் யாராவது வக்கீலிடம் போய்க் கன்ஸ்ல்ட் பண்ணிண்டு வரட்டுமா அப்பா?"

"வேண்டாம். அவசியமானா அப்புறம் நானே உங்கிட் டச் சொல்றேன். கோர்ட், வக்கீல் இந்த மாதிரி விஷயங்களிலே வேணுமாமா பெரிய விவகாரஸ்தர். முதல்லே நான் இது விஷயமா அவரைப் போய்க் கலந்துக்கறேன்."--

"செய்ய ங்கே - ப்ப I எனக் ம் அ ன் iல்ல

ff 疗 துதா ந iš li jfi சனையாப் படறது."

இரண்டு கடிதங்களையும் எடுத்துக் கொண்டு வேணு மாமா வீட்டுக்குப் புறப்பட்டார் சர்மா.

தெருத் திரும்பும்போது வில் வண்டியில் அமர்ந்தபடி சீமாவையர் எங்கோ புறப்பட்டுப் போய்க் கொண் டிருப்பது தெரிந்தது. சர்மா எந்தத் திசையில் நடந்து போய்க் கொண்டிருந்தாரோ அந்தத் திசையிலேயே இவருக்கு முன்பாகச் சிறிது தொலைவில் அந்த வண்டி போய்க் கொண்டிருந்ததனால் வண்டியில் பின்புறம் பார்த்தபடி அமர்ந்து வெற்றிலை போட்டுக் கொண் டிருந்த சிமாவையர் சர்மா பின்னால் நடந்து வந்து கொண்டிருப்பதைப் பார்த்துவிட்டார். உடனே அவர் வண்டியில் இருந்தபடியே உரத்த குரலில் சர்மாவைக் குசலம் விசாரித்தார். சர்மாவும் சிரித்தபடியே மறு மொழி கூறினார்.

“நீர் ஊரிலே இல்லாத சமயத்திலே படப்புத் தீப் பிடிச்சு எரிஞ்சுதுன்னா போய்ப் பார்த்து உம்ம பையனிட்ட விசாரிச்சுட்டு வந்தேன். ஏதோ கஷ்ட காலம் போலிருக்கு."

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:துளசி_மாடம்.pdf/209&oldid=579925" இலிருந்து மீள்விக்கப்பட்டது