பக்கம்:துளசி மாடம்.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி 19


மாமாவுக்குப் புரிந்தன. சர்மாவின் குடும்பம் பரம்பரை யான வைதிகக் குடும்பம். சர்மாவோ சுபாவத்தில் நல்லவர் என்றாலும் கட்டுப்பட்டி. வெளி உலகை அதிகம் சுற்றிப் பார்த்திராதவர். சிறு வயதிலேயே வேதங்களை யும் சாஸ்திரங்களையும் கற்றவர். பரம்பரை பரம்பரை யாக வேதாத்யயனம் செய்த குடும்பத்தைச் சேர்ந்தவர். கிராமத்தின் மூன்று பெரிய தெருக்களையும் சேர்ந்த மற்ற வர்களுக்குச் சாஸ்திர விஷயங்களிலோ சம்பிரதாய விஷயங்களிலோ யோசனை சொல்லி வழிகாட்டும் உயர் அந்தஸ்தை உடையதாயிருந்தது சர்மாவின் குடும்பம். வடக்குத் தெரு, நடுத்தெரு, தெற்குத் தெரு என்ற அக்கிரகாரத்தின் மூன்று தெருக்களிலும் உள்ளவர்கள் பெரும்பாலும் அத்வைத மடத்தின் வழிகளைப் பின்பற்று கிறவர்கள். அத்வைத மடத்தின் சுவாமிகளால் சங்கர மங்கலத்திற்கும், அகஸ்திய நதிக்கரையிலிருந்த சுற்றுப்புற கிராமங்களுக்கும் பூர் மடத்தின் பிரதிநிதியாக, முந்திராதி காரி பதவியில் இருந்து வருபவர் விசுவேசுவர சர்மா பூரீ மடத்தின் ஏஜண்ட் என்ற இந்தக் கெளரவப் பதவியை ஏற்றிருந்ததனால் சங்கர மங்கலத்திலும் அக்கம் பக்கத்துக் கிராமங்களிலும் நல்லது கெட்டதுகளில் பூரீ மடம் சம்பாவனை' என்ற பெயரில் ஒதியிடப்படும் தொகையை யும் மரியாதையையும் பெற்று வரும் அதிகாரம் சர்மா வுக்கு இருந்தது. பிரான்சில்-பாரிஸில் வேலை பார்க்கும் தன் மகன் செய்திருக்கும் காரியத்தால் இனி இந்த அந்தஸ் துக்களும், மரியாதைகளும் என்ன என்ன மாறுதல்களை அடையும் என்றெல்லாம் எண்ணியே சர்மா சலனம் அடைந்திருக்கிறார் என்பது வேணுமாமாவுக்கு இப்போது புரிந்தது.

'எப்படியாவது இதைத் தவிர்த்துடலாம்னு நினைச் சுத்தான் உங்ககிட்டவும், உங்க் பொண்கிட்டவும், இப்போ பிரஸ்தாபிச்சதைத் தவிர வேற யாரிட்டவும் 屬 லெட்டரிலுள்ளதைப் பத்தியே நான் பிரஸ்த்ா

க்கலே.'

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:துளசி_மாடம்.pdf/21&oldid=579736" இலிருந்து மீள்விக்கப்பட்டது