பக்கம்:துளசி மாடம்.pdf/212

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

210 துளசி மாடம்


"இப்போ என்ன பண்றதா இருக்கேள் ?" "என்ன பண்றதுன்னு உங்க கிட்டக் கலந்து பேச லாம்னுதான் இங்கே புறப்பட்டு வந்தேன்..."

"வந்த மட்டிலே ரொம்ப சந்தோஷம் ஆனா இதுக்கு நீரோ கமலியோ பதிலொண்ணும் எழுதவேண் டாம். தூக்கி மூலையிலே எறிஞ்சிட்டுப் பேசாமே இரும், சொல்றேன்."

“எங்க மேலே ஏன் சட்ட ரீதியா நடவடிக்கை எடுக்கக் கூடாதுன்னு என்னமோ நோட்டீஸ் விட்ட மாதிரியின்னா அனுப்பிச்சிருக்கா ? பதில் எழுதாமே

எப்பிடிச் சும்மா இருக்கிறது ?"

"நடவடிக்கை எடுக்கட்டுமே. அப்பப் பாத்துக்க லாம்."

" ஆஸ்திகாள் மனம் புண்பட றாப்பிலேயோ, பூரீமடத்து நெறிமுறைகளுக்குப் புறம்பாகவோ எதுவும் செஞ்சுடலே'ன்னு நானும், எனக்கு இந்து மதத்தின் மேலேயும், இந்து கலாசாரத்தின் மேலேயும் மதிப்பும் பக்தியும் இருக்கு, அந்த மதிப்போடேயும் பக்தி சிரத்தை யோடயும்தான் நான் கோவிலுக்குப் போறேன்’னு கமலியும் ஆளுக்கொரு பதில் எழுதிப் போட்டுட்டா நல்லதில்லையா ?"

"வீண் வம்புக்காகவும் விரோதத்துக்காகவும், அனுப் பப்பட்டிருக்கிற இந்தக் கடிதாசுகளுக்கு அத்தனை மரியாதை தரவேண்டியது அவசியந்தானா Φπή ιειπή நீரோ, கமலியோ, பதில் எழுதினாலும் எழுதாவிட்டா லும் அவா உங்க மேல் நடவடிக்கைன்னு கோர்ட்டுக்குப் போகப் போறதென்னவோ, நிச்சயம். நீர் பதில் எழுதற தாலே அது ஒண்னும் மாறவோ குறையவோ போற தில்லே. பேசாம இரும். மேற்கொண்டு அவா என்ன தான் செய்யறான்னு பார்ப்போம், அப்புறம் நாம் பண்ண முடிஞ்சதைப் பண்ணலாம்."

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:துளசி_மாடம்.pdf/212&oldid=579928" இலிருந்து மீள்விக்கப்பட்டது