பக்கம்:துளசி மாடம்.pdf/214

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

212 துளசி மாடம்


சர்மா சொல்லியதை ஒவ்வொன்றாகச் சிந்தித்துப் பார்த்தபோது அவர் பயந்த கபாவமுள்ளவர் என்று. தாமாக அவரது குடுமியையும் விபூதிப் பூச்சையும், பஞ்சகச்ச வேஷ்டியையும் செருக்குத் தெரியாத பவ்ய மான நடையையும் பார்த்து நினைத்திருந்ததுதான் தவறோ என்று வேணு மாமாவுக்கே இப்போது தோன்றியது. சாது மிரண்டால் காடு கொள்ளாது" என்ற பழமொழி நினைவு வந்தது அவருக்கு. சிறிது நேரம் யோசனைக்குப் பின், “நீர் பதிலொண்ணும் எழுத வேண்டாம். ஆனா இன்னிக்குச் சாயங்காலமே ரவி பிடம் நான் சொன்னேன்னு கமலியைக் கோவிலுக்கு அழைச்சுண்டு போகச் சொல்லும். போயி..." என்று அருகே நெருங்கி மீதி விஷயத்தைச் சர்மாவின் காதருகே குரலைத் தணித்துக் கொண்டு கூறினார் வேணுமாமா.

"இப்படிச் செய்யறதாலே என்ன பிரயோஜனம்னு: புரியலே "

“பிரயோஜனம் நிச்சயமா இருக்கு ரசீது மட்டும் ஞாபகமா வாங்கிக்கச் சொல்லும். மறந்துடாதேயும் ! தாளை, நாளன்னிக்கின்னு ஒத்திப் போட்டுடப்படாது இதை இன்னிக்கே செஞ்சாகணும்..."

"சரி நீங்க சொன்னபடியே பண்ணிடச் சொல்றேன். வரட்டுமா ?"-என்று சர்மா புறப்பட்டார். வேணு மாமாவும் சர்மாவுக்கு உற்சாகமாக விடை கொடுத்தார்.

அன்று மாலை சர்மா ரவியையும் கமலியையும் அழைத்து "ஏய் ரவி! இன்னிக்கிக் கமலியை கோவிலுக்கு அழைச்சிண்டு போயிட்டுவா அதோட அங்கே கோவில் அர்த்த மண்டபத்திலே திருப்பணி நிதி வசூல்னு போர்டு மாட்டிண்டு ஒரு கிளார்க் உட்கார்ந்துண்டிருப்பன். அவனிட்ட இந்த ஐநூறு ரூபாயைக் கமலி கையாலேயே குடுக்கச் சொல்லி நம்ம வீட்டு அட்ரஸ் போட்டு அவ பேருக்கே மறந்துடாமே ஒரு ரசீதும் வாங்கிக்கோ"

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:துளசி_மாடம்.pdf/214&oldid=579930" இலிருந்து மீள்விக்கப்பட்டது