பக்கம்:துளசி மாடம்.pdf/215

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி 213


என்று கூறி ஐந்து நூறு ரூபாய் நோட்டுக்களை அவனிடம் எடுத்து நீட்டினார் சர்மா.

'திருப்பணி உண்டியல்னு வச்சிருக்காளே ; அதிலே பணத்தைப் போட்டுட்டா எ ன் ன ? இதற்குப் போயி ரசீது எதுக்குப்பா ?”

'கண்டிப்பா ரசீது வேணும். அதுவும் நான் சொன்ன படி கமலி பேருக்கே வேணும். உண்டியல்லே போடப் பிடாது. நேரே குடுத்தே ரசீது வாங்கிண்டு வந்துடு - என்று மீண்டும் வற்புறுத்திச் சொல்லி அனுப்பினார் சர்மா. -

அப்பா சொல்லியபடியே அன்று ரவி கமலியை அழைத்துக் கொண்டு கோவிலுக்குப் போனான். கணவ னுக்கு அருகே அடக்க ஒடுக்கமாகச் செல்லும் ஒர் இந்துப் பெண் போல் ரவியோடு தேங்காய் பழத்தட்டு ஏந்திக் கோவிலுக்குச் சென்றாள் கமலி.

21

ஒர் ஆனும் பெண்ணும் தங்களுக்கு இடையிலான உறவு என்ன என்பதைச் சொல்லாமலே சேர்ந்து தங்கி யிருப்பது என்பது சங்கரமங்கலத்தைப் போன்ற ஓர் இ ந் தி யக் கிராமத்தில் தொடர்ந்து சாத்தியமாகக் கூடியது இல்லை. அதுவும் பெண் முற்றிலும் புதியதும் அந்நியமானதுமான ஒரு நாட்டிலிருந்து வ ந் த வள் என்னும்போது வசந்திகளுக்கு ஒரு வரம்பே இருக்க வழியில்லை. ஒழுங்கும் நியாயமும் கூட இராது. வதந்தி களுக்கும் விவஸ்தை இராது. அந்த வதந்திகளைப் பரப்புகிறவர்களுக்கும் விவஸ்தை இராது. சாதாரண விஷயங்கள் பிரமாதப்படுத்தப்படுவதும் பிரமாதமான விஷயங்கள் சாதாரணப் படுத்தப்பட்டுக் கொச்சை யாக்கப் படுவதும் அந்த வதந்திகளைப் பொறுத்தவரை

மிகவும் சகஜம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:துளசி_மாடம்.pdf/215&oldid=579931" இலிருந்து மீள்விக்கப்பட்டது