பக்கம்:துளசி மாடம்.pdf/221

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி 219


இதைக் கேட்டுச் சர்மா சிரித்தார். இறைமுடி மணியின் வாதம் முரட்டுத்தனமாக இருந்தாலும் அதை எதிர்த்து சர்மா மேலும் விவாதிக்கவில்லை. இறைமுடி மணி தொடர்ந்தார்

“அது மட்டுமில்லே விசுவேசுவரன்; இன்னொண் ணையும் தம்பி எங்கிட்டச் சொல்லிச்சு. நடுவிலே ஒருநாச் சாயங்காலம் இப்ப நீயும் நானும் பேசிக்கிட்டி ருக்கிற மாதிரி இதே ஆத்தங்கரையிலே தம்பியும் நானும் பேசிக்கிட்டிருந்தோம். அப்ப மனசுவிட்டுப் பலதை எங்கிட்டச் சொல்விச்சு. எல்லா வெள்ளைக்காரப் பொம்பளங்களையும் போலக் காதலிச்சாலே கல்யாண மாயிடிச்சின்னோ, மோதிரம் மாத்திக் கிட்டாக் கல்யாணமாயிடிச்சின்னோ அந்தப் பொண்ணு நின்ைக் கலியாம். இந்த ஊரு முறைப்படி சாஸ்திர சம்மத்த் தோட ஒரு சடங்குகூட விடாம, நாலுநாள் கல்யாணம் நடத்தனும்னு ஆசைப்படுது'ன்னு தம்பி சொல்லிச்சு ! "என்னப்பா பயித்தியக்காரத் தனமாயிருக்கு? இந்துணர்வ இருக்கறவங்களையே சீர்திருத்தத் திருமணத்துக்கும் பதிவுத் திருமணத்துக்கும் நாங்க தயாராக்கிட்டு வர்றோம். விஞ்ஞானம் வளர்ந்த தேசத்திலேருந்து வர்ற இளம் பொண்னு ஒண்னு இப்பிடிப் பத்தாம் பசலித் தனமா ஆசைப்படுதே'ன்னு நான் கூடத் தம்பியைக் கேலி பண்ணினேன்! இல்லே! இங்கே புறப்பட்டு வர்றப்பவும் வந்தப்புறமும் அதைக் கமலி வற்புறுத்துது'ன்னு தம்பி சொல்லுது. இந்த விஷயத்தை அது தன் பேரண்ட்ஸ் கிட்டவே சொல்லி அந்த மாதிரிக் கல்யாணத்துக்கு ஆகற செலவுக்குன்னு நெறையப் பணம் வேறே வாங்கிட்டு வந்திருக்குன்னும் தம்பி சொல்லுச்சுப்பா."

"ஊர் உலகம் ஒரு பக்கம் இருக்கட்டும் தேசிகாமணி

என் மனைவி காம்ாட்சி இருக்கறவரை அது நடக்கவே நடக்காதுப்பா."

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:துளசி_மாடம்.pdf/221&oldid=579937" இலிருந்து மீள்விக்கப்பட்டது