பக்கம்:துளசி மாடம்.pdf/228

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

226 துளசி மாடம்


காய்க் கொத்து எல்லாம் இருந்தன. வேனுமாமா

அப்போது மிக மிக உற்சாகமாயிருந்தார்.

“வாங்கோ ! என்னோட எஸ்டேட் மானேஜர் புதுசா வீடு கட்டிக் கிருகப்பிரவேசம் பண்றானாம். இப்பத்தான் வந்து அதுக்கு என்னை அழைச்சிட்டுப் போறான். ஏது... அப்பாவும் பிள்ளையுமா இப்படிச் சேர்ந்து வந்திருக் கேள்... ரவிக்கும் எவனாவது வக்கீல் நோட்டீஸ் அனுப்பிச் சிருக்கானா ?" -

"அதெல்லாம் ஒண்ணுமில்லே. கோவில் திருப்பணி டொனேஷன் விஷயம் நீங்க சொன்னபடி பண்ணியாச்சு. ரவியே கூடப்போயிப் பணத்தைக் குடுத்துக் கமலி பேருக்கு ரசீதும் வாங்கிண்டு வந்துட்டான்."

"சபாஷ் ! அப்புறம் ?"

"சுபஸ்ய சீக்கிரம்னு பெரியவா சொல்லுவா, இந்த ஊர்க்காராளும், மத்தவாளும் பண்ற புரளியைப் பார்த்துப் பார்த்து நேக்கே தைரியம் வந்தாச்சு... நீங்க கொஞ்சம் பெரிய மனசு பண்ணி ஓர் ஒத்தாசை செஞ்சா கணும். இது மாதிரி ஒத்தாசையைப் பண்ற துணிச்சல் இந்த ஊர்ல உங்களைத் தவிர வேறு யாருக்கும் இருக்கிறத் துக்கில்லே."

"ஏதேது ? பீடிகை ரொம்பப் பெரிசாப் போட றேளே? விஷயம் என்னன்னு முதல்லே சொல்லுங்கோ'

கூட்டி முழுங்கித் தட்டுத் தடுமாறி ஒரு வழியாக விஷயத்தைச் சொன்னார் சர்மா.

இதைக் கேட்டு உடனே பதில் எதுவும் சொல்லாமல் சிறு குழந்தை போல் வயதுக்கு மீறின உற்சாகத்தோடு உள்ளே ஒடிய வேனுமாமா கைப்பிடி நிறையச் சர்க்கரை யோடு திரும்ப ஓடிவந்து சர்மாவை வாய் திறக்கச் சொல்லிப் பிடிவாதம் பண்ணி அதைக் கட்டாயமாக

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:துளசி_மாடம்.pdf/228&oldid=579944" இலிருந்து மீள்விக்கப்பட்டது