பக்கம்:துளசி மாடம்.pdf/230

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

228 துளசி மாடம்


காரர். நான்தான் பொண் வீட்டுக்காரன். நீர் வந்திருந்து கல்யாணத்தை நடத்திக் கொடுத்தால் மட்டும் போறும். மத்ததெல்லாம் நான் பார்த்துக்கறேன்."

"நான் அப்படி விட்டுட முடியுமா? எல்லாக் கல்யாண மும் போல இல்லியே இது ? நானும் சேர்ந்து கவலைப் பட்டாகணுமே? நாலு நாள் முகூர்த்தத்துக்கு வாத்தியார் ஒத்துண்டு வரணும். சீமாவையர் சொல்லி வச்சு மிரட்டித் தடுப்பர். இது சாஸ்திர சம்மதமான கல்யாணமில்லே' வரமுடியாது'ன்னு வைதிகாள் அட்டி சொன்னா என்ன பண்ணுவேள் ? அப்படி ஏதானும் இடைஞ்சல் வரும்னு தான் தோன்றது, வந்தாலும் பரவாயில்லே. நானே எல்லாம் பண்ணிக்கிறேன். பிருஹஸ்பதி ஸ்தானத்திலே நானே இருந்துடறேன்."

"அதுக்கு அவசியம் இருக்காது சர்மா ! இன்னிக்கி முக்காவாசிப் புரோகிதாளும் வைதிகாளும் சாஸ்திரத் தையும் மந்திரங்களையும் நல்ல ரேட்டுக்கு வித்திண்டு தான் இருக்கா, கூடப் பத்து ரூபா தட்சிணை தர்றதா இருந்தாச் சீமாவையர் ஆத்திலே பூர்வ காரியங்கள் பண்ணி வைக்கிற அதே வாத்தியாரே வந்து நம்ம கமலியோட கல்யாணத்தை நடத்தி வச்சாலும் ஆச்சரி யப் படறதுக்கில்லே."

"இந்த ஈரோப்பியன்ஸ் வேடிக்கையான ஜனங்களா இருப்பா போலிருக்கு. இதுக்கெல்லாம் வேணும்னு ஆசைப்பட்டுத் தன்னோட அப்பாகிட்டவே சொல்லி வேண மட்டும் பணம் வாங்கிண்டு வந்திருக்கா அவ. நீங்க சிரமப்படனும்கிறதேயில்லே... அதையே கமலி கிட்டக் கேட்டு எலலாச் செலவுக்கும் வாங்கிக்கலாம்..." ‘உளறாதேயும் சர்மா! எனக்கென்ன சிரமம் இதிலே ? நான் இதைப் போலப் பத்துக் கல்யாணத்தைச் சொந்த மாக் கையிலேருந்து செலவழிச்சுப் பண்ணி வைப்பேன், அத்தனை செளகரியத்தைப் பகவான் எனக்குக் கொடுத் திருக்கான்...எனக்கு இன்னும் ஒரு பொண்ணிருந்து நான்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:துளசி_மாடம்.pdf/230&oldid=579946" இலிருந்து மீள்விக்கப்பட்டது