பக்கம்:துளசி மாடம்.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22 துளசி மாடம்


சர்மா ஆல்பத்தில் அடுத்த பக்கத்தைப் புரட்டினார். - "இது வெனிஸ்-அவா ரெண்டு பேரும் போட்லே போறா. வெனிலை மிதக்கும் நகரம்னு இத்தாலியிலேயே சொல்லுவா மாமா. பாரிஸ்லேருந்து ஜெனிவா, ரோம் எல்லாத்துக்கும் ரயில்லேயே போயிடலாம் மாமா... நானும் அப்பாவும்கூட ரயில்லேதான் அங்கெல்லாம் போனோம். அவா ரோம்’னு சொல்றதில்லே ரோமா'ன்னு தான் சொல்றா..."

ஆல்பத்தில் மற்றொரு பக்கம் புரள்கிறது. சர்மா வின் கைவிரல்கள் சுபாவமாக இயங்காமல் மெல்ல நடுங்குவதையும், பதறுவதையும் வசந்தி கவனித்தாள். வேனு மாமா சர்மாவைக் குஷிப்படுத்த முயன்றார்,

"நான் பாரிஸ்லே அவகிட்டப் பேசிண்டிருந்தப்போ, செளந்தர்ய லஹரி'யைப் பற்றி- என்னை ஏதோ இவன் ரொம்பத் தெரிஞ்சவனாக்கும்னு அவளா நெனைச்சுண்டு என்னமோ சந்தேகம் கேட்டாள். “கமலி ! இதெல்லாம் நீ சங்கரமங்கலத்துக்கு வர்றப்போ உன் எதிர்கால மாம னாரிட்டக் கேளு. அவர் பெரிய சான்ஸ்கிரிட் ஸ்காலர்"னு அவகிட்டச் சொல்லியிருக்கிறேன்..."

"ஏன் ரவியையே கேட்டுத் தெரிஞ்சுக்கலாமே ?" என்று அமுத்தலாகப் பதில் வந்தது சர்மாவிடம் இருந்து. வேனு மாமா தளரவில்லை. சர்மாவின் மன நிலையை இளகச் செய்யும் முயற்சியில் தொடர்ந்து ஈடு பட்டார்.

"கமலியோட விநயம், அடக்கம், பணிவு, இதையெல் லாம் பார்த்தால் அவ அத்தனை பெரிய பிரபுத்துவக் குடும்பத்துப் பெண்கிறதை எப்பேர்க் கொத்தவாளா லேயும் ஊகிக்கக் கூட முடியாது சுவாமி அவ்வளவு நல்ல சுபாவம்...!"

சர்மா பட்டென்று ஆல்பத்தை மூடி வசந்தியிடம் நீட்டி விட்டு எழுந்து நின்றார். புறப்படத் தயாரான

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:துளசி_மாடம்.pdf/24&oldid=579740" இலிருந்து மீள்விக்கப்பட்டது