பக்கம்:துளசி மாடம்.pdf/241

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி 239


என்று படித்துக் கொண்டிருந்தவளை- அவர் நிறுத்தச் சொல்லாமலே சுவாரசியமாகக் கேட்டுக் கொண்டிருந் தார். நேரம் போவதை யாருமே உணரவில்லை. ஸெனந்தர்ய லஹரி, கனகதாரா ஸ்தோத்திரம் முடிந்து அவள் தாள்களை மூடியதும், "வேறு ஏதாவது மொழி பெயர்ப்பு வேலை நடக்கிறதா?"... என்று எண்ணி அதையும் சைகை மூலமே அவர் கேட்டபோது, கமலி அதைப் புரிந்துகொண்டு 'பஜ கோவிந்தம் பண்ண முயன்று கொண்டிருக்கிறேன்' என்றாள். வாயருகே வலது கையை அடக்கமாகப் பொத்தி அவள் பதில் கூறிய பாணியின் இந்தியத் தன்மையை அனைவரும் வியந்து கொண்டிருக்கும்போதே, 'பஜ கோவிந்தத்தைப் பிரெஞ்சு மொழியில் பண்ணத் தொடங்கியிருந்தால் அதிலிருந்தும் ஒ ன் று சொல்லேன்'-என்பதுபோல் சைகை செய்தார் அவர்.

"புணரபி ஜனனம், புனரபி மரணம்... புனரபி ஜனனி ஜடரே சயனம்..." -என்ற பகுதியைச் சொல்லிவிட்டு அதன் பிரெஞ்சு மொழி பெயர்ப்பைக் கூறினாள் கமலி.

இதில் ஆச்சரியம் என்னவென்றால் அவர் நினைத் தது-அந்த நினைப்பின் சைகையிலேயே அவளுக்குத் தவறாமல் புரிந்ததுதான். மகான்கள் பேசாமலே தங்க ளுடைய நினைப்பைப் பிறருடைய இதயத்தில் தெளி வாக்கி விடுவார்கள். வாயும் செவியும் பாமரர்களுக்குத் தான். அப்படிக் கேட்கவும் பேசவும் செய்யும் கருவிகள் இல்லாமலே கேட்பிக்கவும், பே சு. வி. க் கவு ம் செய்ய மகான்களால் முடியும்’ என்பதை அவருடைய அந்த நிலைமை அவர்களுக்கு உணர்த்தியது.

நீண்ட நேரத்திற்குப் பின் அவருடைய பார்வை ாவியின் பக்கம் திரும்பியது. அவன் பவ்யமாகத் தன்னைப் பற்றிய விவரங்களையும், கமலியைப் பற்றிய சில தகவல்களையும் கூறினான். பிரான்சில் இந்திய மொழிகளைக் கற்கும் மாணவர்கள் பற்றிச் சொன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:துளசி_மாடம்.pdf/241&oldid=579957" இலிருந்து மீள்விக்கப்பட்டது